பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 தமிழில்...வளர்ச்சியும்


சிறுகதைகள் எழுந்தன. வேதநாயகம் பிள்ளை, வ.வே. சு. ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள். மறைமலையடிகளின் 'கோகிலாம்பாள் கடிதங்கள்' என்னும் நூலில், கடித வடிவிற் கதை கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கடிதமும் ஒரு சிறுகதைபோலவும், எல்லாக் கடிதமும் சேர்ந்து ஒரு காவல் போலவும் அமைந்துள.

    சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. ஏறத்தாழ இருபத்தைக்து ஆண்டுகளாக அவர் முதலில் ஆனந்த விகடனிலும், பிறகு 'கல்கி' பத்திரிகையிலும் ஆகச் சிறுகதைகள் எழுதிப் புகழ் படைத்துள்ளார். நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய இலக்கிய வகைகளில் எல்லாம் அவர் ஏற்றபடி தொண்டாற்றியுள்ள அறிஞர். அவர் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதில் ஐயப்பாடில்லை. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன; ஏறத்தாழ குட்டி நாவல்கள் என்றுகூடச் சில காரணங்களாற் சொல்லி விடலாம்.
     
    அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். 'கு.ப. இராசகோபாலனும்' 'புதுமைப்பித்தன்' என்ற சொ. விருத்தாசலமும் நம் சந்ததி யாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப் பித்தன், உலகச்சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். “உலகச் சிறுகதைகள்" "தெய்வம் கொடுத்தவரம்" என்ற தலைப்புகளில் அவை வெளிவந்திருக்கின்றன. அவர் தாமே எழுதிய கதைகளிலும், மாப்பசான், கிப்ளிங், டால்ஸ்டாய், கார்க்கி போன்ற பிற நாட்டுக் கதைப் பேராசிரியர்களுடைய செல்வாக்குக் காணப்படுகிறது. அவர் கதைகளில் வரும் பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் எங்காவது ஒரு மூலை முடுக்கில்