உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 தமிழில்...வளர்ச்சியும்

லும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை என்ற நம்பிக்கை பெயின் என்பார்க்கு உண்டு. (If a story once fell to be false, then all its virtues are of no avail"- Paine P. 39.) மெழுகு வர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனியதாகவும் முகருவதற்கு மணமுடையதாகவும் இருந்தாலும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய் போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது கம்பிக்கை.

எழுதும் முறை

   சிறுகதை எழுதுகிறபொழுது, ஒருவர் கதையை முன்னர் அமைத்துக்கொண்டு தக்க பாத்திரங்களைக் கதைக்கு ஏற்ப இயைத்துக்கொள்ளுதல் கூடும். அன்றி, பாத்திரங்களை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்ப கிகழ்ச்சிகளை உண்டாக்கிக்கொள்ளுதல் கூடும். அன்றி, ஒரு சூழ்நிலையைப் படைத்துக்கொண்டு அதனுள் இயையுமாறு கதை நிகழ்ச்சிகளையும் ஆட்களையும் உருவாக்கிக் கொள்ளுதல் கூடும்.
    சிறுகதை எழுதுகிறவர்கள் சிகழ்ச்சிகளைப் படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புக்கள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானுலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பது மரபு.

பாத்திரங்கள்

    பாத்திரங்களைப் படைக்கும்பொழுது படிப்போர் கற்பனை உள்ளத்தில் அவை உண்மையேபோல் தோற்றும் :படி படைத்தல்வேண்டும். நம் வீட்டிலோ நம் தெருவிலோ