பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தமிழ்ச் செல்வம்


ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் பெற்றமொழி தமிழ் என்பது. மூன்றாவது, தமிழில் உள்ள 'அகப்பொருள் இலக்கணம்' போல இன்றைக்கும் பிற மொழிகளில் இல்லை

என்பது. நான்காவது, ஒழுக்கத்தைப்பற்றி

மட்டும் கூறியிருக்கிற தனி நூல்கள் பிற மொழி களிலே காணப்படாமல், தமிழ்மொழியில் மட்டுமே காணப்படுவது. இவை நான்கும் தமிழுக் குள்ள தனிச் சிறப்புக்கள்.

ஒழுக்கத்தைப்பத்தி சொல்ற நூல்கள் எது?

ஆத்திச்சூ, கொன்றைவேந்தன், ந ல் வழி. நன்னெறி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், நான்மணிக்கடிகை, நாலடியார்,

திருக்குறள் முதலியனவாகும். இவற்றுள் பல

நூல்கள் சிற்சில துறைகளில் ம ட் டு மே ஒழுக்கத்தைப்பற்றிக் கூறுகின்றன. ஆனால், திருக்குறள் மட்டும் எல்லாத் துறைகளிலும் ஒழுக்கத்தை வற்புறுத்திக் கூறி, முற்றும் நிறைந்த தமிழ்ச் செல்வமாகக் காட்சியளித்து வருகிறது.

இதைத் தவிர வேறே நூல்களும் இருக்குதா சார், தமிழிலே?

ஆம்; இருந்தது.முன்னொரு காலத்தில். அந்நூல் களிற் பல அடுத்தடுத்துத் தோன்றிய கடற்கோள் களால் அழிந்து போயின. அதற்கும் தப்பிய நூல் களிற் சில படையெடுப்புகளால் அழிந்தொழிந் தன. எஞ்சியுள்ள நூற்களிற் சில நஞ்சுமனங் கொண்ட மக்கள் வஞ்சகமாக உள்நுழைந்து நூல் நிலையங்களைத் தீயிட்டு அழித்ததால் சாம்பலா யின. இதற்கும் தப்பிய சில அருஞ்சுவடிகளில் உள்ள தீஞ்சுவையை மக்கள் உண்ணாததால் கறையான்களும், செல்லுப் பூச்சிகளும் சுவைத்துத்