பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களாகிய டி.கே.எஸ். சகோதரர்கள், இத்'தமிழ்ச்செல்வ'த் தைத் தமிழகம் எங்கும் நடித்து வருகிறார்கள். தமிழகத்தைத் தாண்டி டில்லியிலும் பம்பாயிலும் கல்கத்தாவிலும் நடித்திருக்கிறார்கள். திருச்சி வானொலியும் சென்னை வானொலியும், டில்லி வானொலியும், மைசூர் வானொலியும் இதனை நடித்து ஒலிப்பரப்பி உள்ளன. டில்லி வானொலியி லிருந்து ஐரோப்பியருக்கான வெளி நாட்டு அஞ்ச லிலும், தமிழ் மக்களுக்கான வெளி நாட்டு அஞ்ச லிலும், இது ஒலிபரப்பப்பட்டுள்ளது. கன்னட மக்கள் கேட்டு மகிழ, இது கன்னட மொழியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இது இன்னும் பல இந்திய மொழிகளிலும், உலகமொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெறும் என்ற நம்பிக்கையும், நமது உயர்ந்த பண் பாட்டைப் பிறர் கண்டு மகிழ இத் தமிழ்ச் செல்வம் உதவும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு.

"தமிழ்ச் செல்வம்' பெரும்வெற்றி அடைந்த தற்குக் காரணங்கள் இரண்டு. முதல் காரணம், நாடகத்தின் பொருள் ஆயிரக்கணக்கான ஆண்டு களாக வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ்ப் பெருமக்க ளின் உயர்ந்த பண்பாட்டையும், நாகரிகத்தை யும், தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து விளக்கியிருப்பது. இர ண் டா வ து, ஒரு