பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல்

59


த : அப்பாடா! வர்ணனை முடிந்ததா? ஆண் மானின் பெருந்தன்மையைப் புகழ்வதற்குத்தான், இல் வளவு அற்புதமான நிகழ்ச்சியைக் குறிப்பிட்டீர் களாக்கும்? பெண்குலத்தின் மீது பழிசுமத்தப் பார்க்கிறீர்களா? நிரம்ப அழகுதான்! அந்தப் பெண்மான் ஏதோ தன்னலம் வாய்ந்ததுபோலக் கதையை முடித்து விட்டீர்களே? -

தலைவன் : என்ன இது? நான் அன்பின் பெருமையைச் சொன்னால், நீ ஏதோ தவறாகப் பொருள்.கொள் கிறாயே?

த : இல்லை. நான் தான் கேட்கிறேன்--இரண்டு மான் களும் தண்ணீரில் வாயை வைத்துக் குடித்தன என் பதைத்தானே பார்த்திருப்பீர்கள்? அவற்றில் ஆண் மான் தான் குடிப்பதுபோலப் பாசாங்கு பண்ணிற்று என்பது உங்கள் கற்பனை தானே? ஏன். பெண்மான் தான் ஆணுக்காக அப்படிப் பாசாங்கு செய்தது என்று சொல்லக் கூடாதோ? உள்ளபடியே ஆண் உண்டுகளிக்க வேண்டு மென்பதில் பெண்ணுக்குத்தான் ஆ ைச யு ம், அன்புள்ளமும் உண்டு; தெரியுமா?

தலைவன் : ஆம் கண்னே! நீ சொல்வதும் உண்மை யாகத்தான் தோன்றுகிறது, எ ன து கண் ணோட்டத்தில், ஆண் மான் தியாகம் செய்தது போல் தோன்றிற்று; உனது கண்ணோட்டத்தில் பெண்மான்தான் தியாகம் செய்திருக்கும் என்று தோன்றுகிறது. எப்படியோ - இரண்டு மான் களும் ஒன்றையொன்று பேணிநின்றன என்பது மட்டும் உண்மை! х

த : பார்த்தீர்களா! பார்த்தீர்களா! அ ந் த க் காட்சியைக் கண்ணாரக் கண்ட உங்களை, காணாத நான் ஏமாற்றி விட்டேனே! வெற்றி எனக்குத்தான். ...