பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடை

63


இன்று வா, காலை வா, மாலை வா என்று சொல்லும் சொற்களை நினைத்து நினைத்து, என் நெஞ்சமெல்லாம் புண்ணாய்விட்டது. நான் என்ன தான் செய்ய?

ம : இந்த நாட்டில் எத்தனையோ தொழில்கள் இருக்க, போயும் போயும் தமிழை ஏன் படித்தீர்கள்?

பு தமிழைப் படித்தது குற்றமா! தாயைப் போற்றுவது

குற்றமா? -

ம போற்றுங்கள். நன்றாய்ப் போற்றுங்கள்...யார் வேண்டாமென்றது? தமிழைப் படித்ததோடு வேறு ஏதாவது ஒரு தொழிலையும் மேற்கொண்டிருக்கக் கூடாதா பாடிப் பிழைக்கும் இந்த பரிசிற்றொழில் தானா உங்களுக்குக் கிடைத்தது? முப்பது ஆண்டு கள் தமிழை ஆராய்ந்து, மூன்று நாழிகை நேரம் மூச்சு விடாமல் கத்தினாலும், முக்கால் காசுக்கு, வருமானம் உண்டா? சொல்லுங்கள்...

பு : நீ கூறுவது உண்மைதான். ஆனால், அது தமிழைப் படித்தவர்கள் குற்றமல்ல-அதை ஆதரிக்காதவர்கள் குற்றமடி ஆதரிக்காதவர்கள் குற்றம்!

ம : கல்வியும் செல்வமும் ஒருவரிடம் நில்லாது.கற்றவர் களைவிட்டு வறுமை அகலாது என்று சொல்கிறார் களே, அது எவ்வளவு உண்மை!

பு : உண்மையே; அது தமிழைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையே. அன்டே!தமிழ் இருக் ைெதே. அது தேன். அதைச் சுவைத்தவர்கள், ஈ எறும்பு போல அதனுடன் ஒட்டிக் கொள்வார்களேயன்றி, அதை விட்டு மீளமுடியாது. வேறு எந்தத் தொழிலுக்கும் அவர்கள் திரும்புவதில்லை. வறுமை வராமல் பின் என்ன செய்யும்! இதனை அறிந்து தான், தமிழ் மன்னர்களும், தமிழ் வளர்த்த