பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தமிழ்ச் செல்வம்


காட்சி : 2

ஒரு குடும்பம்

கணவன் : மைத்துனரே! போர் என்றதும், தங்கள் புயம்

மைத்து

iங்குகிறதே!

னன் : தங்கள் தோள்களும் விம்மிப் புடைக்கின்ற

வேகத்தையல்லவோ காண்கிறேன்! ஆம்; போர்ப்பறை ஒலியைக் கேட்டதும், ந்மக்கு உண்மையிலேயே ஒரு தெம்பு உண்டாகிற தல்லவா? அது இந்த நாட்டு மண்ணின் இயல்பு, அத்தான்! இப்போது போர்ப்பறை ஒலித்தது; இன்னும் சற்று நேரத்தில் போர் முரசு முழங்கப் போகிறது, பாரும். போர் முரசு கேட்டதும், நமக்குள்ளேயே ஒரு துடிப்பு வெறி உண்டாகும். முரசொலி வெறியைக் கிளப்புமா? அதற்கு அவ்வளவு வன்மை உண்டா? - ஆமாம் : அந்த முரசு, எருமைக்கடாத் தோலி னால் செய்யப்பட்டது, தெரியுமா? சாதாரண எருமையல்ல. சண்டையில் உயிர் போகும் அளவுக்குப் போரிட்டு, எதிரியைக் கொன்று வெற்றிமாலை சூடி மகிழ்ந்து, வீறு. ல் போர்க் களத்தைவிட்டு வெளியேறும் போது, எந்த எருமை உயிர் விடுகிறதோ, அந்த வீர எருமைக் கடாவின் தோலைக் கொண்டுதான் போர் முரசு கட்டுவார்களாம். அந்த முரசை வைப்பதற்கு ஒரு கட்டில் உண்டு. அரசு கட்டிலுக்கும் முரசு கட்டிலுக்கும் ஒரே மரியாதைதான். (முரசொலிக்கிறது.) அப்படியா? அதோ போர் முரசு.

இருவரும் : பேர்ர்! போர்!