பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தமிழ்ச் செல்வம்


பறையறைவோன் :

விட்டுக்கொரு ஆண்மகன்

காட்டைக் காக்கப் புறப்படுக! வீட்டுக்கொரு ஆண்மகன்

காட்டைக் காக்கப் புறப்படுக! செல் : மணிவண்ணா மணிவண்ணா! மணி : அம்மா! செல் : இங்கே வாடா! என் கண்ணே! மணி : ஏனம்மா? செல் : விடிந்ததும் விடியாததுமாக எங்கே போய்

விட்டாயப்பா. மணி : விளையாடப் போனேனம்மா. செங்: ஐயோ! பாவம் ஒன்றுந் தெரியாத பிள்ளை! செல் : விளையாடும் நேரமா இது போர்க்களத்தில் விளையாட வேண்டிய நேரத்தில், புழுதியிலா விளையாடுவது? மாற்றானுடன் விளையாட வேண்டிய நேரத்தில், மண்ணிலா விளையாடு வது? என் செல்வமே! இப்படிவா; உட்கார்; எண்ணெய் பூசி தலைவாரி முடிககிறேன். மணி : ஏனம்மா? செல் : என் செல்வமே! நீ உடனே போருக்குச் செல்ல

- வேண்டும்! செங் ; ஹா என்னம்மா இது? செல் : உன் மாமாவையும். அப்பாவையும் கொன்று வீழ்த்திய சேர வீரர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும். குலப்பெருமையைக் காப்பாற்ற - வேண்டும், தெரியுமா? x மணி. அப்படியே ஆகட்டும் அம்மா! நேற்றே அப்பா

வுடன் போகவேண்டுமென்று புறப்பட்டேனே. அப்பாதான் என்னை விட்டுவிட்டுப் போய்

விட்டார். இன்றைக்குத்தான் என் மணம் நிம்மதி