பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரம்

83


-வில்லை. முதுகிலே காயம் என்றதும், அவளுக்கு வந்த ஆவேசத்தைப் பார்த்தாயா? இத்தகைய

தாய்மார்களால்தான் த மி ழ் க் கு ல ம் தழைக்கிறது.

காட்சி 5

போர்க்களம்

(போர்க்க ளத்தில், ஒரு கையில் தீவட்டியுடனும், ஒரு கையில் வாளுடனும் செல்லம் தன் மகனைத் தேடுகிறாள்.)

யாரது?...ஆ ஒரு பெண், ஒரு கையில் தீப் பந்தம்; மற்றொரு கையில் வாள். எதைத் தேடு கிறாள்? பிணங்களைப் புரட்டிப் பார்க்கிறாளே! ஏன் இப்படித் தலைவிரிகோலமாய் ஆவேசங் கொண்டவளைப்போல் அலைகிறாள்? ஐயோ பாவம் யாரைப் பறி கொடுத்தாளோ?...அம்மா! அம்மா! யாரைத் தேடுகிறீர்கள்...உங்கள் உறவினர்கள் யாராவது?...

என் மகன் ! என் மகன்!

மகனா? த்சு த்சு...எத்தனை வயதிருக்கும் தாயே அடையாளம் சொல்லுங்கள். நானும் தேடிப் பார்க்கிறேன். - பத்தாண்டுப் பாலகன் என் மக்ன்.

ஓ! அந்த இளங்குழந்தையை ஈன்ற தாய் நீங்களா? ஆஹா! தாயே! நீங்கள் செய்த பாக்கியமே பாக்கியம்! இன்றையப் போரில் அந்தப் பாலகன் காட்டிய வீரம்-அப்பப்பா! குழந்தையா அவன்? இல்லை இல்லை! கூற்றுவன்