பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தமிழ்ச் செல்வம்


போல் நின்றான். எதிரிகள் முன். மன்னரும் மாற்றாரும் அந்த இளம் பிள்ளையின் இணை யற்ற வீராவேசத்தைக் கண்டு, வியப்பே வடிவாக நின்றார்கள், தாயே!

ஆ!

இத்தகைய வீரமகனைப் பெற இவன் தாய் என்ன நோன்பு நோற்றாளோ என்று, எல்லோ ரும் வாய்விட்டுக் கூறினர், தாயே! ஆனால் இன்றைய வெற்றிக்குக் காரணமாயிருந்த அந்த

இளஞ்சிங்கம், இறுதியில், வீரசுவர்க்கம் அடைய நேரிட்டது.

எங்கே அவன் உடல்? எங்கே என் மகன்?

சிறப்பான முறையில் தங்கள் வீரத்திருமகனின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்பது மன்னரின் கட்டளை. அதற்குக் காவலாகத்தான் நான் நிற்கிறேன். இதோ, இப்படி வாருங்கள் தாயே! -

(துடிதுடித்துச் செல்கிறாள்.)

ஆஹா! மார்பிலே காயம்! கையிலே வாள்! என் குலக்கொழுந்தே! நீயே வீரன்! நீயே வீரன்! சிங்கத்தின் வயிற்றிலே நரி பிறக்காது. நான் பெற்ற மகனே உன் னைக் கோழையென்று சொன்னானே-ஒரு கயவன்-அவன் அழிந்து போகட்டும்! என் வயிற்றில் பால் வார்த்தாய் செல்வமே! உன்னைப் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சியைவிட, இப்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேனடா கண்ணே. என் மகன் வீரன்! அவனுக்கு நான் ஊட்டியது வீரப் பால்! வாழட்டும் வீரர் பரம்பரை வாழ்க சோழ நாடு!