பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தமிழ்ச் செல்வம்


அமைச் &

ஒடுங்கள்! நம்புலவர் பெருமானை அழைத்து வாருங்கள். சேரர் உயிரும், சோழர் உயிரும்


மகிழ்ச்சிக் கூத்தாடுகிறீர்கள்? அமைச்சரே. வருந்துகிறேன். சோழர் பரம்பரை தோன்றிய காலந்தொட்டுப் போரில் புறங்காட்டி ஒடுபவர் மீது அம்பு எய்ததே இல்லை. நேற்றுச் சேரனும் புறங்காட்டி ஒடவில்லை. அவரது முதுகில் நம் அம்பு எப்படிப் பாய்ந்தது? எதிரியின் முதுகில்

காயப்படுத்தியது நமது வீரத்துக்கு இழுக்

கன்றோ? இந்தப் பெரும் பழியைத் துடைக்கா விட்டால், சோழர் பரம்பரையின் புகழெல்லாம் மண்ணா கிவிடுமே! இது எனக்கும் பழி! என் பரம்பரைக்கும் இழுக்கு அமைச்சரே! சேரனை முதுகிற்காயப்படுத்திய பழியைப் போக்க, நானும் வடக்கு நோக்கியிருந்து உயிர்விடத் தீர்மானித்து விட்டேன். (வடக்கு நோக்கி உட்காருதல்.)

மன்னவா? இதென்ன முடிவு?... ஒடுங்கள்

ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. சேரமன்னர் தம் முதுகில் காயம்பட்டது தன் பரம்பரைக்கு இழுக்கென்று உயிர்விடத் துணிந்தார். நம் சோழ மன்னர் சேரமன்னரை முதுகிற் காயப்படுத் தியது, தன் வீரத்திற்கு இழுக்கென்று உயிர்விடத் துணிந்து விட்டார். இது வன்றோ தமிழர் வீரம்! இந்த வீர மன்னர்களைக் காப்பாற்றினால்தான் தமிழ்நாடு வாழும். ஒடுங்கள்! நம் புலவர் பெரு மானால் தான் இவர்களைக் காப்பாற்ற முடியும். விரைந்து செல்லுங்கள். வாழ்க தமிழ் நாடு! வாழ்க தமிழரின் வீரம்!