பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

115


நூல் : சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் - 6
கட்டுரையாளர் : தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, எம்.ஏ., பி.எல். எம். எல். சி.
உத்யானம் - பூத்தோட்டம்

உத்யான பத்திரிகை என்ற வடமொழியில் வெளிவரும் மாத சஞ்சிகை - ஒரே ரூபாய் சந்தாவுள்ள மாத சஞ்சிகை, திருவையாறு என்று கூறப்படும் ஊரிலிருந்து வெளிவரும். இதை ஐந்து ஆறுகளின் மத்தியில் விளங்கும் உன்னதமான உத்யானத்தில் பூத்தோட்டத்தில் வீசும் வாசனையைக் கிரகித்து வெளிவரும்.

நூல் : சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் - 8
கட்டுரையாளர் : நாரதர்
சரிகை - பொன்நூல்
சீவன்முத்தர் - கதிமேலார்
மோட்சம் - பேராப்பதம்
சையோகம் - புணர்ச்சி
கவிவாணர் - பாவலர்
நூல் : நளாயினி வெண்பா (1929)
நூலாசிரியர் : திருப்பத்துார் கா. அ. சண்முக முதலியார்.
City Police - பட்டண காவலாளிகள்

1459ல் ஹுமாயூன் தன் படைகளுடன் கிளர்ச்சித் தலைவனாகிய தெலிங்கானா ஜமீன்தாரை ஜயிக்கப் படை எடுத்த போது பீதரில் ஓர் கலகம் நேர்ந்தது. அதை அல்லாவுத்தீன் கேள்வியுற்று பீதர் சென்று பட்டண காவலாளிகள் (City Police) இரண்டாயிரம் நபர்களை அஜாக்கிரதை என்னும் குற்றத்திற்காகக் கொலை செய்தான்.

இதழ் : ஆனந்த போதினி
 தொகுதி - 15, (15.12.1929)
பகுதி - 6 பக்கம் 376
கட்டுரையாளர் : கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா