பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

137


அக்காலத்தே இல்லாத புரோகித வேலை, வடமொழி மந்திரங்கள் (நிறைமொழி) தமிழ் மரபுக்கு மாறான பல செயல்கள் இன்ன பிறவும் இக்காலத் தமிழர் திருமணத்துள் இடம் பெற்றுத் தமிழ் மரபைக் கெடுத்துவிட்டன.

நூல் : தமிழர் திருமண நூல் (1939)
நூலாசிரியர் : வித்வான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, பி.ஓ.எல்,
பகுதி அறிவிப்பு, பக்கம் 1
மறுமணம், மணமுறிவு

திருவாளர் வித்வான் இராச மாணிக்கம் அவர்கள் எழுதிய தமிழர் திருமணச் சீர்திருத்தக் குறிப்பினைப் படித்தேன். பண்டைத் தமிழர்களின் மணமுறைகளை எடுத்துக் காட்டுகளாலும், ஏதுக்களாலும் நன்கு விளக்கியிருக்கின்றனர்.

மணமுறையைத் திட்டம் செய்வதுடன், ஆடவர், பெண்டிர்களின் மறுமணம், மணமுறிவு முதலிய பொருள்கள் பற்றியும் மாநாடு முடிவு செய்யுமென நினைக்கின்றேன்.

நூல் : தமிழர் திருமண நூல் (1939) பக்கம் : 29, 30
பகுதி : தமிழ்ப் பெரியார் கருத்துக்கள்
த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்,
Typewriting machines – எழுத்தடிக்கும் பொறிகள்

எழுத்தடிக்கும் பொறிகளும் Typewriting Machines இந்திய பத்திரிகைத் தொழில் வளர்ச்சிக்கு அவ்வளவாக உதவுவதில்லை.

அக்கருவிகள் ஆங்கிலத்திற்கு இருப்பது போல இந்திய சுதேச மொழிகளுக்கு அவ்வளவு நல்ல அமைப்பிலே இல்லாமையால், நல்ல விளக்கமான அச்சுப் போன்ற எழுத்துக்களிலே செய்திகள் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுவதிலே அவ்வளவாகப் பயன்படுவதில்லை.