பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

உவமைக்கவிஞர் சுரதா



Power loom - அடிக்கும் தறி
Pendulam - தொங்கியாடி

அச்சடிக்கிற விதத்தை உண்டாக்கிய ஜான் பாஸ்டு (John Faust) என்பவரைப் பிசாசின் தோழன் என்றும், பிசாசைக் கைவசப்படுத்திக் கொண்டு புஸ்தகம் புஸ்தகமாய் உற்பத்தி செய்கிறானென்றும் சொன்னார்களன்றோ? நூற்கிற யந்திரம், சாயமிடும் யந்திரம், அடிக்கும் தறி இவைகளை உண்டு செய்தவர்களும் கொஞ்சப்பாடா பட்டார்கள்? ஒன்றுமில்லாத ஒரு பெண்டுலம் (அதாவது கடிகாரங்களில் ஆடும் அரசிலை போன்ற தொங்கியாடி’ என்பது) கண்டுபடித்தவனைக்கூட அல்லவா 'குடுகுடுபாச்சா Mr. Swing Swang என்று பரிஹஸித்தார்கள்!

மேற்படி இதழ் : (1-10-1890) புத்தகம் -4 இல- 12, பக்கம் - 94
கட்டுரையாளர் : ஓர் இந்து
Gas Light - காற்றெரி விளக்கு

நீராவியந்திரம் கண்டுபிடித்தவனைப் பைத்தியக்காரனென்று கல்லை விட்டெறியாத பேருண்டோ முதலில்? காற்றெரி விளக்கை (Gas Light) உண்டாக்கினவனை அவன் காலத்தோர் யார்தான் நகைத்துக் காறி உமிழவில்லை!

மேற்படி இதழ் : (1-10-1890) புத்தகம் -4 இல- 11, பக்கம் - 94
கட்டுரையாளர் : ஓர் இந்து

-

பென்ஸல் - எழுதுகோல் (1890)
விகுர்தி வருஷத்திய பாக்கெட் பஞ்சாங்கம்

இப்பஞ்சாங்கம் ஒன்று ரிப்பன் அச்சுக் கூடத்துத் தலைவர் ம-ளள-ஸ்ரீ, சை. ரத்தின செட்டியர் அவர்கள் அனுப்ப வரப்பெற்றோம். இப்புத்தகத்திலடங்கிய விஷயங்கள் அநந்தம். அவற்றை இவண் குறிப்பிடப் பெருகும். இப்புத்தக ரூபத்துள், தினசரிக் குறிப்புக்குரியவும், வரவு செலவுக்குரியவும், விசேஷக் குறிப்புக்குரியவுமான விஷயங்கள் எழுதிக்கொள்ள வெற்றுக் கடிதங்கள் விடப்பட்டுள்ளன. எழுதுவதற்குத் தகுந்த (பென்ஸல்) எழுதுகோலும் வைத்திருக்கின்றது. விலை 6 அணா. தபாற்கிரயம் - 1 - அணா. வேண்டுவோர் மேலைய செட்டியார் அவர்கட்கு எழுதிக்கொண்டால் கிடைக்கும் - பத்

இதழ் : ஸ்ரீலோகரஞ்சனி (1890) புத் - 4, இல - 3 பக். - 1