உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

உவமைக்கவிஞர் சுரதா



எரிநக்ஷத்திரம் - விண்வீழ்க்கொள்ளி

சில சமயங்களில் விண்வீழ்க் கொள்ளிகள் இப்பூமியில் விழுகின்றன. அப்போது அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கையில் அவைகள் சாதாரணமான கற்களாகவே இருக்கின்றன. இவைகளைப் பல பொருட்காக்ஷி சாலையில் நாளைக்குங் காணலாம்.

இதழ் : மஹா விகட தூதன் 4-4-1891
புத்தகம் : 6, இலக்கம் 13, பக்கம் : 3.
கட்டுரையாளர் : ஜான் டானியல் பண்டிதர்.
Photo - புகைப்படம்
வெகு நேர்த்தியான அமைப்பு! அற்புதமான வேலை!
பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும்!
தங்க வர்ணமான சாயையுள்ளது!!
சிதம்பரம் நடராஜர் கோயிலின் புகைப்படம்.
சிற்சபை, கனகசபை, நிருத்தசபை, முக்குறுணிப் பிள்ளையார் கோயில், தில்லை கோவிந்தராஜர் சந்நிதி முதலியனவும் இரண்டு கோபுரங்களுமடங்கியது.
இதழ் பிரம்மவித்தியா (1-12-1891)
பாரசூட் - பெருங்குடை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது ஆதைவிட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாரசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக்கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி க்ஷேமமாக வந்திறங்கினார். '

இதழ் : ஜநாநந்தினி (1891) மார்ச் புஸ்த 1 இல. 3. பக்கம் : 53.
ஆசிரியர் : அன்பில் எஸ். வெங்கடாசாரியார்