பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

27



மரணப்ரயானம் - கடை வழி

கடை வழி - முடிவாகிய பிரயாணம். (மரணப்ரயாணம்), உலகத்தாரே பொருள் முதலிய யாவும் நீங்களிறக்கும்போது கூட வராதன ஆதலால், குமரவேளை வாழ்த்தி, எளியோர்க்கு உதவி செய்யுங்கள் என்பது கருத்து.

நூல் : கந்தரலங்காரம் மூலமும் உரையும் (1892) பக்கம் - 10.
பதவுரை : வித்யாவிநோதிநி பத்ராதிபர்
ராவுத்தன் - குதிரை விரன்
ராவுத்தன் - திசைச்சொல், பொருள் - குதிரை விரன் என்பது.
நூல் : கந்தரலங்காரம் மூலமும் உரையும் (1892); பக். - 22
பதவுரை : வித்யா விநோதிநி பத்ராதியர்
மோக்ஷம் - தனிவீடு
மேற்படி நூல் : (1892) பாடல் 45. பக்கம் -28.

(இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது)

Room – சிற்றில்

அறை - அடி, சொல், சிற்றில் (Room) திரை, பாறை, மறை, மலையுச்சி.

நூல் : தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2
நூலாசிரியர் : பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீஸ் காலேஜ் தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்)