பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

79


Manager - பொறுப்பாளர்

கல்விச் சாலைகளில் புதிதாய் வந்த ஆசிரியரை சில மாணவர்கள் ஆழம் பார்க்கத் துணிவது போல், புதிதாகப் பட்டத்துக்கு வந்திருக்கிற ஜமீன்தாரவர்களையும் உதவியாக வந்திருக்கும் புதிய பொறுப்பாளரை (மானேஜர்) யும் குடிகள் பதம் பார்க்க முயன்றார்கள்.

மேற்படி நூல் : பக்கம் - 81

Records – ஆதரவுகள்
Circular – கற்றுத்தரவு

இந்த மலை வழக்கை மலையினும் பெரிதென்று சொல்வது பெரிதும் தகும். வேலியே பயிரை மேய்வதுபோல், இவ்வழக்கில் துரைத்தனத்தார் எதிரியாயிருந்து மன்றி இடையூறாகவும் இருந்தார்கள். ஷை வழக்குக்கு வேண்டும் ஆதரவுகள் (Records) பலவற்றிற்கும் அரசாட்சியாரிடம் (ஆபீசுகளில் இருந்து நகல்கள் எடுக்க வேண்டியதாயிருந்தது. ஜமீன்தாரவர்கள், வகையரா கேட்கும் நகல்கள் கொடுக்கக் கூடாதென்று சில்லாக் கலைக்டர் பொதுவான ஒரு சுற்றுத்தரவு (Circular) அனுப்பியிருந்தபடியால், சர்க்கார் கட்சிக்கு மாறான ஆதரவுகள் கிடைப்பது அரிதினும் அரிதாயிற்று.

மேற்படி நூல் : பக்கம் - 88

Tutor - தனியாசிரியர்

அப்பால் 17வது வயதில் முதலாவதாக 17 ரூபாச் சம்பளத்தில் தாம் படித்த கல்விச் சாலையிலேயே கீழ் வகுப்புகளில் ஒன்றிற்கு ஆசிரியராக நியமிக்கப் பெற்றார். அதில் சிறிது காலம் சென்றபின் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சொத்துக்கள் சர்க்கார் மேற்பார்வையில் இருந்து வருகையில், ஷைஜமீன் மைனர் துரையவர்களுக்குத் தனியாசிரியராக (Tutor) நியமிக்கப் பெற்றார்.

மேற்படி நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி.செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924), பக்கம்
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

(திருநெல்வேலி இந்து கலாசாலைத் தமிழாசிரியர்)