பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

உவமைக்கவிஞர் சுரதா


இடத்தில் ஒப்பிக்கும்போது, சிங்கம்பட்டி மலை சம்பந்தமான மலை போன்ற மன்றாட்டு வழக்கை (வியாச்சியம்)யும் கூடவே ஒப்பித்தார்கள்.

நூல் : வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளை யவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 பக்கம்-78
நூலாசிரியர் : மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை
Passport - வழிச்சீட்டு

ஸ்ரீ திலகர் சீர்திருத்த விஷயமாகப் பார்லிமெண்டார் சட்டமாக்குவதற்கு முன் இங்கிலாந்தில் பெரிய கிளர்ச்சி செய்து பொது சனங்களை எழுப்பி இந்தியாவுக்குச் சுய ஆட்சி கொடுக்கத் தொழில் கட்சி மெம்பர்களை விட்டு பார்லிமெண்ட் மகாசபையில் கேட்கும்படி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டு ஸ்ரீ திலகர், விபின சந்திர பாலருடனும் கேல்காருடனும் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அவர், சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து ஸிலோன் சென்று, அங்கிருந்து நேரே செல்வதற்கு ஆயத்தமாயிருந்தார்.

சென்னையில், ஸ்ரீ திலகருக்குப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. பல்லாயிரம் பேர் கூடின ஒரு பெரிய மகா நாட்டில் ஸ்ரீ திலகர் இங்கிலாந்துக்குச் செல்லும் நோக்கத்தைப் பற்றிக் கூறினார். சென்னையை விட்டு ஸிலோன் போய் சேர்ந்து, கப்பல் பிரயாணஞ் செய்ய ஆயத்தமாயிருக்கையில், ஸ்ரீ திலகர் முதலானோர், செல்லக்கூடாதென்று வழிச்சீட்டு (passport) ரத்து செய்யப்பட்டது. இவ்வுத்திரவு இந்தியா கவரன் மெண்டார் செய்ததே.

நூல் : லோகமான்ய பாலகங்காதர திலகர் (1924 பக்கம் : 247
நூலாசிரியர் : கிருஷ்ணஸ்வாமி சர்மா
Bank - பணக்கூடம்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலிச் சில்லாவில், துறைமுகப் பட்டணமாகிய தூத்துக்குடி ஒன்றைத் தவிர, வேறு எவ்விடத்திலேனும் பணக்கூட்டுத் தொழிற் சங்கம் என்பதே கிடையாது. காசுக்கடைக்காரரும், நாட்டுக்கோட்டைச் செட்டிமாரும், சில பெரும் பணக்காரர்களும் தனித்தனியே பணங்கொடுக்கல் வாங்கல் செய்வதுண்டு. ஆனால் பொது ஜனங்களுக்குப் போதுமான வசதிகள் ஏற்படாதிருந்தது. இது விஷயத்தில் சனங்களுக்குள்ள குறைகளை நீக்கும் பொருட்டும், பணமுடையார் பலரும் அப்பயனை நிரந்தரமாயடைய வேண்டியும், முதலில் இவர் (வக்கீல் பண்டாரம் பிள்ளை