பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

உவமைக்கவிஞர் சுரதா



பிரசங்கம் - விரிவுரை

ஒருநாள் மாலை 6 மணிக்கு ஒரு பெருங் கழகக் கூட்டத்தில் அரும்பொருள் ஒன்றைப் பற்றி ஓர் விரிவுரை (பிரசங்கம்) செய்ய உடம்பட்ட ஒரு நாவலர் அன்று பகலில் தம்முடம்புக்குரிய வசதிகளைக் கவனியாது அசட்டை செய்திருந்த படியால் அவர் பேசத் தொடங்கி முகவுரை முடியுமுன் அவருக்குத் தொண்டைப் புகைச்சல் வந்து மேற்பேச வொட்டாமல் தடுத்துவிட்டது.

மேற்படி நூல் : பக்கங்கள் : 37, 38
Director – தலைமையோர்

தூத்துக்குடியில் சுதேசிக் கப்பற் கழகம் ஏற்பட்டிருந்த காலத்தில் நமது நண்பர் அதைத் தொடங்கினோர்க்கு வேண்டும் உதவிகளை நெல்லையிலிருந்து புரிந்து வந்தபடியாலும், பொதுவாக உலக நடையில் சிறந்த அநுபவமுடையவரா யிருந்தபடியானும், மேற்படி காரியங்களை நிகழ்த்தும் தலைமையோர் (டைரக்டர்)களில் இவரும் ஒருவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் - 60

அரித்துவாரம் - சிங்கத்துளை

நூல் : பிரமானந்த நான்மணி மாலை (1924 பக்கம் 13
நூலாசிரியர் : B. B. நாராயணசாமி நாயுடு (திருநெல்வேலி சிந்துபூந்துறை பென்சன் போலீஸ் இன்ஸ்பெக்டர்)
வசன நடை - ஒழுக்கம்

பத்மினி பெயர்க்கிணங்க நல்லொழுக்கம் நன்கமைந்தது; (ஒழுக்கம்-வசனநடை என்பதும் ஒருபொருள்) எவர்க்கும் எளிதில் பொருள் விளக்கும் எழிலது, செந்தமிழனங்கின் கீர்த்தியைத் தெரிவிப்பது நடந்தே நவில்வது.

நூல் : பத்மினி (1924 பக்கம் : 6
தலைப்பு : சில தமிழ் அபிப்பிராயங்கள்.
சொல் விளக்கம் : திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்து ஸ்வாமிகள்