பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

151


ஆட்சியின் கீழ் வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை, இராம நாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கைப் பகுதிகள் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. இதற்குக் காரணமாக இருந்தவன் பாளையப்பட்டுகளின் தலைவர்களில் தலைமையாய் இருந்த ஆர்க்காடு நவாப்பாவான். ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற கடனுக்காக அவன் தன் கப்பப் பணம் முழுவதையும் வசூலிப்பதற்கு உரிய அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினான். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டபொம்மன், புலித்தேவன் என்ற இரு பாளையக்காரர்களும், சிவகங்கை வீரர்களான மருதிருவரும் 'வரிகொடோம்' என்று கூறி வீரமுழக்கம் செய்தனர். ஆனால் எட்டையபுரப் பாளையக்காரரும், புதுக் கோட்டைத் தொண்டைமானும் பதவி ஆசையின் காரணமாய் ஆங்கிலேயரது கைப்பொம்மைகளாக மாறியதால் இவ் வீரர்கள் கொல்லப்பட்டனர். எனவே நாம் அனைவரும் ஆங்கிலேயரது அடிமைகளானோம்.

ஆங்கிலேயர் ஆட்சியினால் விளைந்த நன்மைகள்

சாதிப் பிரிவினைகளும், சமயப் பிணக்கும் நீதிப்பிழையும் நியமப்பிழையும் மலிந்து, அடிமை மோகமும் ஆள்வினையின்மையும் கொண்டு, அறியாமை இருளிலே மூழ்கி நிலை தாழ்ந்து தலைகவிழ்ந்து ஒடுங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு அறிவொளி காட்டியது ஆங்கிலேய ஆட்சியே என்று கூறி னால் அது முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற உண்மையாகும்.

சமுதாயச் சீர்திருத்தம்

ஆங்கிலக் கல்வி நாட்டிலே பரவுமுன்னர்த் தமிழ்ச் சமுதாயம் அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. சாதிப்பேய் தமிழ் மக்களைப் பிரித்து அரித்து வந்தது. இந்த நாட்டுக்கே உரிய தமிழ்மக்கள் அயலவரால் நாயினும் கேடாக நடத்தப்