பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. செந்தமிழும் கொடுந்தமிழும்

செந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம்.

இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந் மிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனல் முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதி காரத்திலே காணப்படுகிறது.

"செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில்” என்பது சிலப்பதிகார வரியாகும். இது தவிர வேறு நூற்களிலே இப்பிரிவு கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனல் இப்பிரிவை வளர்த்துப் பெரிதாக்கி வாதமிட்டவர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களே.

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்" என்ற நூற் பாவிற்கு உரையாசிரியர்கள் கூறிய உரைப்பகுதி வருமாறு :

"செந்தமிழ் ஒன்று; அதனைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று'கூறிக் கொடுந்தமிழ் நாடுகளை,

"தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன் வடக்கு-நன்றாய
சீத மலாடு புன்னா செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"