பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தமிழ்நாடும் மொழியும்


என்பவர் கல்வி மிகவுடையவர்; கல்லாடத்திற்கு உரை செய்தவர். இவரிடம் கற்றவரே இலக்கணக் கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகர்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த பிரபுட தேவர் என்ற ஓர் அரசர், திருப்புகழ் பாடிய அருணகிரியாரைப் புரந்தனர். வெங்களப்ப நாயக்கராலும், சேதுபதிகளாலும் பல கிராமங்கள் அழகியசிற்றம்பலக் கவிராயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டன. பாரதம் பாடிய வில்லியாரைப் புரந்த பெருமை வக்கபாகையெனும் ஊரில் வாழ்ந்த வரபதியாட்கொண்டான் என்பவரைச் சாரும். சொக்கம் பட்டி, மேலகரம், செங்கோட்டை, கண்ணபுரம், எட்டயபுரம், சேற்றூர், சிவகிரி, புளியங்குடி முதலிய ஊர்களை ஆண்ட குறு நில மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புலவர்கள் பலராவர்.

திருமடங்கள் தமிழை வளர்த்த வரலாறு

அயலவர் ஆட்சியிலே தமிழை ஓம்பித் தமிழ்ப் புலவர்க்கு உணவும் உடையும் உறையுளும் அளித்துப் பல தமிழ் நூல்கள் வெளிவரச் செய்த அரும்பெரும் செயலிலே திருமடங்களுக்குப் பெரும் பங்குண்டு. திருவாவடுதுறை மடம், தருமபுர மடம், திருப்பனந்தாள் மடம், மதுரைத் திருஞான சம்பந்தர் மடம், நெல்லைச் செங்கோல் மடம் என்பன தமிழ் வளர்த்த சைவ மடங்களாகும். இனித் தமிழ் வளர்த்த வீரசைவ மடங்கள் கும்பகோணம், தில்லை, திருவண்ணாமலை, துறையூர், மயிலம் முதலிய இடங்களிலிருந்த மடங்களாகும்.

மாதவச் சிவஞான சுவாமிகள், மாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஈசான தேசிகர், கச்சியப்ப முனிவர் முதலிய பெரும் புலவர்கள் அனைவரும் திருவாவடுதுறை