பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

45

அரும்பார் சோலை சுரும்பார் வஞ்சி
அதிக ணில்லிடை அதிகமான் வளர்ந்தனர்
பாரூர் நீர்நாட் டாரூர் தன்னில்
அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன். ஆதலால்,
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ?
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறித் தரணி யோர்க்கே.
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால்
முன்னோர் உரைத்த மொழிதவ றாமல்
எந்நாளா யினும் இரப்பவர்க் கிட்டு
புலையும் கொலையும் களவும் தவிர்ந்து
நிலைபெற வரத்தி நிற்பதை அறிந்து
ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து
பேணி யுரைப்பது பிழையெனப் படாது
சிறப்பும் சீலமும் அல்லது பிறப்பு
நலந் தருமோ பேதை யீரே!

அடிக்குறிப்புகள்

1 சங்ககாலச் சாதிகள் தொழிலடிப்படையிலேயே இருந்தன. உ. வே. சாமிநாதய்யர் புறநானூறு முகவுரையில் சாதிகளின் பட்டியல் ஒன்று தருகிறார். அப்பெயர்கள் இவ்வுண்மைக்குச் சான்றாகக் காணப்படுகின்றன.
அந்தணர், அரசர், அளவர், இயவர், இடையர், உப்பு வாணிகர், உமணர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர், கினைஞர், கினை மகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பன், கூத்தர், கொல்லர், தச்சர், தேர்ப்பாகர், துடியர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி