பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I5

(6) புல்லியது நன்னட்டில் (வேங்கடப் பகுதி) மழை வளம் மாறும் பொழுது இடைக்குல மக்கள் வழிப்போக் கரது பசியைப் போக்க இளைய கிடாய்களின் கழுத்தில் பூட்டியுள்ள மூங்கில் குழாயில் அடைத்த தீம்புளி உண வைப் பசியால் நேர்ந்த காதடைப்பு நீங்கும்படி தேக்கிலே களில் பகிர்ந்து கொடுக்கும் இயல்புடையவர். இத்த கையவர் வாழும் புல்லி என்னுட்டிற்குப் புறம்பே நடத் தற்கு அரிய சுரம் இருக்கிறது.”

() புல்லியினது மலையில் பெரிய தாள்களையுடைய ஆண்யானைகள் வரையணங்குகள் பயிலும் மலைப் பக்கத்தே மழை ஒலியோடு மாறுபட முழக்கம் செய்யும். புல்லி பொய்த்தல் இல்லாத நல்ல புகழை உடையவன் ; பெரிய வண்மையை உடையவன். அவனது மலைவழி மயங்கிக் காணலுறுவது.”

இதுகாறும் குறித்த குறிப்புகளைக் காண, மாமூல ஞர் என்ற பைந்தமிழ்ப் புலவர், 1. வேங்கடமலைப் பகுதி யையும் வேங்கடக் கோட்டத்தையும் நன்கு அறிந்தவர் ; 2. வேங்கட மலைவளம், அரிய கல்வழி, மலைபடு பொருள் கள் முதலியவற்றை நன்கு தெளிந்தவர் ; .ே வேங்கடத் தில் திருவிழாக்கள் மிகுதி என்பதை அறிந்தவர் ; 4. வேங்கடப் பகுதியை ஆண்ட புல்லி என்பவன் வீரத்தை யும் வண்மையையும் நன்கு தெரிந்தவர் ; 5. கள்வர் எனப்பட்ட வேட்டுவர் இயல்பினே அறிந்தவர் என்பன கன்கு அறியக் கிடக்கின்றன. இவற்றிற்கு ‘மேலாகவேங்கட மலைத் தொடர்க்கு அப்பால் (வடக்கே) மொழி வேறு படுகிறது என்ற அவர் குறித்திருப்பதும், அவ் வேறு பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர் வடுகர் என்பதும்

tara, 7. -asih - 311. 8. அகம் . 359.