பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ill, பல்லவர் காலத்தில் வட எல்லை

(கி. பி. 300 - 900)

பல்லவர் ஆட்சி

சங்கநூல்களில் பல்லவர் என்ற சொல் காணப்பட வில்லை. ஆயின், கி. பி. 840-க்கும் 850-க்கும் இடைப்பட்ட காலத்தில் தென்னுட்டின் மீது படை யெடுத்துவக்க சமுத்ரகுப்தன், காஞ்சியில் விஷ்ணுகோபன் என்ற பல்ல வன் ஆண்டு வந்தான் என்று தன் அல்லாஹபாத் கல் வெட்டிற் குறித்துள்ளான். இதனை நோக்சு, தொண்டை மண்டலம் ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது நான்காம் நூற்றாண்டின் தொடக்கத் தில் பல்லவர் என்ற புதிய அரசமரபினர் ஆட்சிக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. பல்லவர் ஆட்சி படிப்படியாக வலுப்பெற்றுக் கி. பி. ஆரும் நாற் ருண் டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை சிறந்த நிலையில் இருந்தது. பல்லவப் பெருநாடு கிருஷ்ணையாறு முதல் புதுக்கோட்டைச் சீமைவரை பரவி இருந்தது.” பல்லவ அரசர் பிராக்ருத வட - தமிழ் மொழிகளில் தங்கள் பட்டயங்களையும் கல் வெட்டுகளையும் வெளியிட்டனர்.

“பல்லவர் தமிழர் அல்லர்; தெலுங்கரும் அல்லர். அவர் கள் பாரசீக காட்டிலிருந்து வந்த பார்த்தியர் மரபினர்.’ என்று சிறந்த ஆராய்ச்சி அறிஞராகிய ஹீராஸ் பாதிரியார்

கூறியுள்ளார். அவர்கள் சாதவாஹனப் பேரரசு வீழ்ச்

  • K. M. Panikkar, A Survey of Indian History,

1. Fr. Heras - “The Origin of the Pallavas, Journal of the Bombay University’, (1936).