பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை 89 மாலையும் என்னும் பொதுப் பெயர் சூட்டலாம். இத்தகைய நூல்களிலும், பலர் பாடல்கள் - நூல்களின் கலப்பு, ஒருவர் பாடல்-நூல்களின் கலப்பு என இரு வகைகள் உண்டு. இவ் விருவகைத் தொகை நூல்களும் தமிழில் நிரம்ப உள்ளன. அவை பின்னர் உரிய பகுதியில் இடம் பெறும். தமிழில் உள்ள தொகை நூல் ஒவ்வொன்றும் மேற்கூறி யுள்ள பிரிவுகளுள் ஏதாவது ஒன்றினைச் சார்ந்ததாயிருக்கும். மற்றும், முன்னர்த் தண்டியலங்காரத்தின் துணைகொண்டு எடுத்துக்காட்டப்பட்டுள்ள தொகை நூல் இலக்கண விளக்கப் படி, குறிப்பிட்ட பொருள், இடம், காலம், பண்பு, தொழில், அளவு, பாவினம், இலக்கியம், கலை, சுவை, கொள்கை, மக்கள், கடவுளர் முதலிய தலைப்புக்களுள் ஒன்றையோ பல வற்றையோ அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றி ருக்கும். இனி, அடுத்தபடியாக, தமிழ்த் தொகை நூல்களை, முற் காலத் தொகை நூல்கள், இடைக்காலத் தொகை நூல்கள், பிற்காலத் தொகை நூல்கள், இருபதாம் நூற்றாண்டுத் தொகை நூல்கள் என்னும் பெரும் பகுதிகளின் கீழ் விரிவாக விளக்கமாகக் காணலாம். அந்தந்தப் பகுதியிலும் சில உட் பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு தொகை நூலும் எந்தப் பொருளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றது என்ற விவரமும் கிடைக்கும். மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தொல்காப்பியத்திலேயே, உரைநடை நூல்கள் நான்கு வகைப் படும் என்று கூறப்பட்டிருப்பினும்,தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தமிழில் தனி உரைநடை நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்துக்கு முன்னோ பின்னோ எழுதப்பட்டிருப்பினும் ஒர் உரைநடை நூலும் கிடைத்திலது. தமிழகத்திற்கு ஐரோப்பியர் வந்தபின்பே தமிழில் தனி உரை நடை நூல்கள் தோன்றத் தொடங்கின. இன்று பெரிய அளவில் தமிழில் உரைநடை அமைந்துள்ளது. ஐரோப்பிய

  • தொல்காப் பியம்-பொரு ளதிகாரம்-செய்யுளியல் நூற்பா 166.