பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தமிழ் நூல் தொகுப்புக் கலை செய்கையறிந்து முடித்துக் கொள்க...கூதாளி, கணவிரி என்பன வற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங் கெடுத்துக் கூதாளங்கோடு, கணவிரங்கோடு செதிள்தோல் பூ என முடிக்க, கூதள நறும் பூ' எனக் குறைந்தும் வரும், இனி இவை மகர ஈறாயும் வழங் கும். அது வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர்' என அத்துப் பெற்று மகரம் கெட்டும், கணவிர மாலையிடுஉக் கழிந்தன்ன என மகரம் கெட்டும். கணவிரங்கோடு என மெல் லெழுத்துப் பெற்றும் நிற்கும்.”. இந்த உரைப்பகுதியால், கூதாளி என்பதே கூதாளம், கூதளம் என்றாயிற்று எனத் தெளியலாம். அடிப்படைச்சொல் லாகிய கூதாளி ஏன்பதற்கும், வெண்தாளி (வெண்டாளி) என்பதற்கும் சொல்லமைப்பில் ஒற்றுமை இருக்கிறதல்லவா? திருமுருகாற்றுப் படையிலும் பட்டினப் பாலையிலும் உள்ள "வெண்கூதாளம்’ என்பதற்கு, வெண்டாளி என நச்சினார்க் கினியர் உரை கூறியுள்ள பொருத்தமும் ஈண்டு ஒப்புநோக்கற் பாலது. அவ்வளவு ஏன்? குறுந்தொகையில், குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரை' என்னும் (60) பாடலில் கூதளி' எனக் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க. இதுவே, வேறோர் ஒலைச் சுவடியில் 'குறுந்தாட் கூதாளி' என்றுள்ளது. இதைக் கொண்டு, நச்சினார்க்கினியர் கூறியிருப்பது சரிதான் என உணரலாம். எனவே, கடைச்சங்க இலக்கியங்களில் கூதளம், கூதாளம் என வரும் இடங்களிலெல்லாம் வெண்டாளி என நாம் துணிந்து பொருள் கொள்ளலாம். இந்த வெண்டாளி, மக்களிடையேயும் புலவர்களிடையேயும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது என் பதைத் தெளிவுறுத்தச் சங்க இலக்கியங்களிலிருந்து மேலும் சில செய்திகள் காண்போம். வெண்டாளி மாலை விரும்பி அணியப்பட்டது என்னும் செய்தியை முருகாற்றுப்படையாலும் பட்டினப்பாலையாலும் முன்னர் அறிந்தோம். இன்னும் இதனை, நற்றிணையில் உள்ள, 'குல்லை குளவி கூதளம் குவளை - இல்லமொடுமிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்' என்னும் பாடல் (376) பகுதியாலும், புறநானூற்றில் உள்ள