பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 159 தமாக அமைத்துள்ளார் தொல்காப்பியர். பன்னிரு படலம் இந்த அமைப்பினும் வேறுபட்டது; புறத்திணை ஒன்று பற்றியே கூறுவது. எனவே, ஒருவர் இயற்றிய தொல்காப்பிய அமைப்பி னையும், பலர் இயற்றிய பன்னிரு படல அமைப்பினையும் ஒத்திட்டுப் பார்த்துக் குழப்பி, இரண்டும் மாறுபட்டவை என பயங்கலாகாது. “ஆக்களைக் கவர்தலும் மீட்டலும் ஆகிய இரண்டுமே வெட்சித் திணை எனத் தொல்காப்பியம் கூறுவதாலும், கவர் தல் வெட்சித் திணை-மீட்டல் கரந்தைத் திணை என்று பன் னிரு படலம் கூறுவதாலும், இரண்டும் மாறுபட்டவை; எனவே, - பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றியிருக்க முடியாது’ என்று ஒரு சிலர் கூறியுள்ளனர். இது பொருந்தாது. தொல்காப்பியர் புறத்திணையியலில், 'படையியங்கு அரவம் என்னும் (3) நாற்பாவின் வாயிலாக, 'ஆ கவர்தலாகிய வெட்சியை விவரித்துள்ளார்; அடுத்து 'வெறியறி சிறப்பின். கரந்தை யன்றியும்.எழு மூன்று துறைத்தே' என்னும் (5) நூற்பாவின் வாயிலாகக் கரந்தை யைப் பெயர் சுட்டியே விளக்கியுள்ளார். கரந்தையைப் பற்றிக் கூறும் வெறியறி சிறப்பின்' என்னும் நூற்பாவின் உட்கிடையை நச்சினார்க்கினியர் மழுப்பி மறைத்தாலும், இளம்பூரணரால் மனமறிய மறைக்க முடியவில்லை. இந்நூற்பாவைத் தொடர்ந் தாற்போல் இதன் உட்கிடையாக இளம்பூரணர் எழுதியுள்ள பகுதி வருமாறு:- - 'வேலன் முதலாக வெட்சித் திணைக்குரிய துறை கூறி னார்: இனி அதற்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று; அதுவும் ஆநிரை மீட்டல் காரண மாக அந் நிலத்தின்கண் நிகழ்வதாகலின் வெட்சிப் பாற் பாட்டுக்குறிஞ்சிக்குப் புறனாயிற்று.” இதனால், வெட்சித்திணையின் ஒருகூறாக் கரந்தைத் திணையையும் தொல்காப்பியர் ஏற்றுக் கொண்டுள்ளார் என் பது புலனாகும். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர், என நச்சினார்க்கினியர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. அவ்வளவு ஏன்? தொல்காப்பிய