பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் - 174 பன்னிருவர் என அறிவிக்கப்பட்டிருப்பினும், அந்தப் பன்னிருவ ரின் பெயர்களும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆசிரியர் களைப் பற்றி அறிந்து கொள்ள நமக்கு அகச் சான்றாகத் துணைபுரிபவை பன்னிரு படலப் பாயிரச் செய்யுளும் அதன் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரச் செய் புளுமே யாகும். பன்னிரு படலப் பாயிரச் செய்யுள் தொல் காப்பிய - பேராசிரியர் உரை ஒன்றால் மட்டுமே அறியப்படு கிறது. இந்தப் பாயிரச் செய்யுள் முன்பே ஓரிடத்தில் கொடுக் கப்பட்டிருப்பினும், குறிப்பிட்டதொரு பயனுக்காக ஈண்டு இன்னொரு முறை வருமாறு: 'வீங்குடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா கல்லிசைத் தமிழ்க்கு விளக் காகென வானோர் எத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல் பொருந்தக் கற்றுப் புரைதடி உணர்ந்தோர் கல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்பது வரைக்குமே பேராசிரியர் தந்துள்ளார். தொல்காப்பி யர் அகத்தியரது நூலைக் கற்றவர் என்னும் செய்தியை மட்டுமே குறிப்பிடும் நோக்கங் கொண்ட பேராசிரியர், இந்தச் செய்யுளைத் தொல்காப்பியரோடு நிறுத்திக் கொண்டார். ஆனால், இச் செய்யுள் தொல்காப்பியரோடு நின்றுவிட வில்லை. தொல்காப்பியரைத் தொடர்ந்து மற்றப் புலவர்கள் பதினொருவரின் பெயர்ப் பட்டியல் நீண்டு கொண்டு போகி றது. நமக்கு அந்தப் பட்டியல் கிடைக்கவில்லை. முழுச் செய் யுளும் பேராசிரியருக்குக் கிடைத்திருந்தும், அவருக்கு வேண்டிய பகுதியோடு அவர் நிறுத்திக் கொண்டது நமது தீப்பேறே! தமக்குப் பின்னால் இந்த நூல் கிடைக்காமல் மறைந்து போகும் என்பது பேராசிரியர்க்கு அப்போது எவ்வாறு தெரியும்? தெரிந் திருந்தால் முழுப் பாடலையும் கொடுத்தாலும் கொடுத்திருப் பார். இச் செய்யுளில் உள்ள, "பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்