பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினாறு படலம் 181 நூல் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார். அவர் காலத்துக் கிடைத்திருந்த இந்த நூல் இப்போது இல்லை. சிலப்பதிகாரத் திற்குச் சிறந்த உரையெழுதியுள்ள அடியார்க்கு நல்லாருக்கும் முற்பட்டவர் அரும்பத உரையாசிரியர். இவரது பெயர் அறி யப்படாமையாலும், இவர் விரிவுரை எழுதாமல் அரும்பதங் கட்கு மட்டும் உரை விளக்கம் தந்துள்ளமையாலும், இவரை அரும்பத உரையாசிரியர்' என்றே அடியார்க்கு நல்லார் முதற் கொண்டு அனைவரும் குறிப்பிடலாயினர். இவர், சிலப்பதி காரத்தில் சொல்லப்பட்டுள்ள இசைக் கரணங்கள் எட்டனுள் வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல் என்னும் முதல் ஐந்திற்கும் தம் சொந்த வாக்கியங்களால் விளக்கம் தந்து, ஆறாவதாகிய "தெருட்டல்’ என்பதின் விளக்கத்திற்காக, பதினாறு படலத்துக் கரண ஒத்தில் உள்ள நூற்பாவை அப் படியே எடுத்துக் கொடுத்துவிட்டார். ஏழாவதும் எட்டாவது மாகிய அள்ளல், பட்டடை என்னும் இரண்டிற்கும் இவர் தந்துள்ள விளக்கம், ஒலை சிதைந்து போனமையால் கிடைக்க வில்லை போலும். இறுதியில், இவை இசைத் தமிழ் பதினாறு படலத்துட் கரண வோத்துட் காண்க என்று கூறி முடித் துள்ளார். அரும்பதவுரையாசிரியரின் அறிவிப்பின்படி, பதினாறு பட லம் என்பது, பதினாறு படலங்களைக் கொண்ட ஒர் இசைத் தமிழ் நூல் என்பதும், ஒவ்வொரு படலத்திலும் சொல்லப்பட் டுள்ள தனித்தனிச் செய்திகள் ஒத்து என்னும் பெயரால் வழங்கப்பட்டன என்பதும், மேற்சொன்ன வார்தல் முதலிய எட்டு இசைக் கரணங்களையும் பற்றிக் கூறும் பிரிவு கரண ஒத்து' என வழங்கப்பட்டது எனவும் கொள்ளலாம். அங்ங்ன மெனில், ஒவ்வொரு படலத்திலும் ஒத்து' என்னும் பெயரில் உட்பிரிவுகள் சில உண்டு எனவும் கொள்ளவேண்டி வரும். இங்ங்ணம் கொள்ளாமல், - ஒத்து என்பதும் படலம் என் பதும் ஒன்றுதான்; படலம் என்பது பெரும் பிரிவு எனவும் ஒத்து என்பது உட்பிரிவு எனவும் கொள்ள முடியாது; எனவே, ‘கரண ஒத்து’ என்பது பதினாறு படலங்களுள் ஒரு படலத் தையே குறிக்கும் எனவும் கூறுவதற்கு இடமுண்டு. ஒத்தி னால் பிண்டமாயிற்று பன்னிரு படலம்’ (தொல் - பொருள்