பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 பதினாறுபடலம் பட்டது. எனவே, இந்நூல் ஒர் இசைத் தமிழ்த் தொகை நூல் என்பது புலனாகும். சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர், வெற்றுபடியாகப் பதினாறுபடலத்துள், எனக் கூறாமல்'இசைத்தமிழ்ப் பதினாறு படலத்துள்’ எனக் கூறியிருப்பதால், இயல் தமிழ்ப் பதினாறு படலம் என ஒன்றோ-அல்லது - நாடகத்தமிழ்ப் பதினாறு படலம் என ஒன்றோ இருக்கலர்ம் பேர்லும் என்ற ஐயம் எழலாம். ஆனால், இப்படியொன்றும் இருந்திராது. இந்த நூலுக்கு முன்பே பன்னிரு படலம் என்னும் இயல் தமிழ் நூல் இருந்ததாலும், பன்னிரு படலத்தின் பிரிவுகள் கைக் கிளைப் படலம், பெருந்திணைப் படலம் என்றெல்லாம் தனித் தனியே வழங்கப்பட்டு வந்ததாலும், இன்னும் படலம் என்று முடியும் பெயரால் வேறு நூல்களும் இருந்திருக்கலா மாதலா லும், எந்தப் படலம் என்னும் குழப்பத்தினின்றும் வேறு பிரித்துத் தெளிவுறுத்தவே, அரும்பத வுரையாசிரியர் இசைத் தமிழ்ப் பதினாறு படலம் எனக் கூறியிருக்கலாம். செஞ்ஞாயிறு என்பதால் வெள்ளை ஞாயிறு ஒன்று இருப்பதாகவும், வெண்டிங்கள் என்பதால் சிவப்புத் திங்கள் என ஒன்று இருப்ப தாகவும் பொருள் இல்லை; செஞ்ஞாயிற்றை நோக்க வெண்டிங் கள் எனவும் வெண்டிங்களை நோக்கச் செஞ்ஞாயிறு எனவும் வழங்கினர். இது போன்றதே இசைத்தமிழ்ப் பதினாறு படலம்' என்பதுமாகும். எது எப்படியிருந்த போதிலும், - இசைத் தமிழ் பற்றிய பலர் இயற்றிய படலங்களின் தொகுப்பு நூல் பதினாறு படலம் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும். சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர், இசைக் கரணங்கள் எட்டனுள் தெருட்டல் என்பதற்கு இலக்கணமாகப் பதினாறு படலத்திலிருந்து ஒரு நூற்பா எடுத்துக் காட்டியுள்ளார்; இந்த உரைப்பகுதிக்கு முன்னால், சிலம்பில் கூறப்பட்டுள்ள பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளை யாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எண்வகை ஆய்வு கட்கும் உரிய இலக்கணமாக எட்டு நூற்பாக்கள் எடுத்துக் காட்டியுள்ளார். முறையே அவை வருமாறு:1. வலக்கை பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல் விலக்கின் றினிவழி கேட்டும்...