பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/210

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. கடைச் சங்க காலம் இப்பொழுது சங்க இலக்கியங்கள் என்னும் பெயரில், மேற்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களும், கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களும், முத்தொள்ளாயிரம் முதலிய சில நூல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இவை, பொது வாகச் சங்க இலக்கியங்கள் எனப்பட்டினும், கடைச்சங்க கால இலக்கியங்களே. கடைச்சங்க இலக்கியங்களுள் தொகை நூல்களாக உள்ளனவற்றைப் பற்றி ஆராய்வோம். 11. பதினெண் மேற்கணக்கு பதினெண் மேற்கணக்கு என்னும் பெயர், பதினெட்டு நூல்களைக் குறிக்கும் ஒரு தொகைப் பெயராகும். இந்தப் பெயருக்குள் பதினெட்டு நூல்கள் அடங்கியுள்ளன. கணக்கு” என்றால், நூல் என்று பொருளாம். அடியளவால் மேலான (பெரிய) பாடல்களையுடைய பதினெட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு எனப்பட்டன. அடியளவால் கீழான (சிறிய) பாடல்களையுடைய பதினெட்டுக் கீழ்க் கணக்கினின்றும் வேறு பிரித்துக் காட்டுவதற்காக, இவை பதினெண் மேற்கணக்கு எனப்பட்டன. பத்துப் பாட்டு எனப்படும் பத்து நூல்களும், எட்டுத் தொகை எனப்படும் எட்டு நூல்களும் ஆகிய பதி னெட்டு நூல்களும், பதினெண் மேற் கணக்கு எனப்படும். ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்ற முறை யில், பன்னிரு பாட்டியல் என்னும் செய்யுள் இலக்கண நூலில், மேற்கணக்கு கீழ்கணக்கு என்பவற்றிற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதனைப் பன்னிரு பாட்டியல் - இனவியலில் உளள, மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே.' மேற்கணக் கெனவும் கீழ்க்கணக் கெனவும் பாற்படு வகையால் பகர்ந்தனர் கொளலே." ‘அகவலும் கலிப்பாவும்பரி பாடலும் பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீறா மிகுத்துடன் தொகுப்ப ைமேற்கணக் கெனவும்