பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190 தமிழ் நூல் தொகுப்புக் கலை பெரும்பாணன் ஒருவன், பெறாதான் ஒருவனைக் காஞ்சித் தொண்டைமான் இளந்திரையனிடத்து ஆற்றுப்படுத்துவது இந் 5. முல்லைப்பாட்டு: 103 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்தது. இதன் ஆசிரியர், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இப் பாடல் அகப்பொருள் பற்றியது. தலைவன் பிரிந்திருக்கத் தலைவி ஆற்றியிருந்த அருமையினையும், போர்முடித்துத் தலைவன் மீண்ட பெருமை யினையும் பற்றிப் பேசுவது இந்நூல்.(முல்லை=ஆற்றியிருத்தல்.) 6. மதுரை காஞ்சி: வஞ்சியடிகள் கலந்த - 782 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவால் அமைந்த இந்நூலின் ஆசிரியர் மாங்குடி மருதனார். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழி யனுக்கு, உலக நிலையாமையை உணர்த்தி, வீடுபேறு எய்து தற்கு உரிய நல்வழிகளைச் செவியறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்நூல். பாண்டியன் நெடுஞ்செழியனது பெருமையும், மதுரையின் மாண்புறு வளமும் இந்நூலில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. (காஞ்சி= நிலையாமை.) 7. நெடுநல் வாடை: நக்கீரனாரால் இயற்றப்பெற்ற அகப்பெருள் கலந்த இந் நூல், 188 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவால் அமைந்தது. பகைவரை வெல்லச் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து, நீண்ட வாடைக் காலத்தில் வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஆறுதல் செய்வது பற்றியது இந்நூல். இதில், வாடைக் குளிரின் வன்மையும், தலைவி தங்கியிருக்கும் இடத் தின் இயல்பும், அரசனது போர்க்களச் செய்தியும் சுவைபெறப் புனைவு செய்யப்பட்டுள்ளன. 8. குறிஞ்சிப் பாட்டு: ஆரிய வேந்தன் பிரகத் தன் என்பான் தமிழ் இன்பத்தைச் சுவைத்தறிவதற்காகக் கபிலரால் இயற்றப்பட்ட இந்தப்