பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எட்டுத் தொகை 205 சிறப்புமிக்கதாய் மிளிர்வதாலும், இஃது இரண்டாவதாகவும் நற்றிணை மூன்றாவதாகவும் நிரல் செய்யப் பெற்றது. எனவே, இறையனார் அகப்பொருள் உரையின் வரிசை முறையே பொருத்தமானது என்பது புலப்படும். அவையாவன: நெடுந் தொகை முதலாகிய தொகை எட்டும் என்றவாறு'. என்னும் பேராசிரியரின் (தொல்-செய்யுளியல்-236) உரைப் பகுதியும் 'அவ்வகை என்றதனான் அவை வேறு வேறாக வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றுணர்க; அவை நெடுந்தொகை முதலிய தொகை யெட்டுமாம்' - என்னும் நச்சினார்க்கினிய ரின் (செய்யுளியல்-236) உரைப் பகுதியும் ஈண்டு ஒப்புநோக் கற்பாலன. இனி, நாமும் இந்த ஆராய்ச்சி நூலில் இந்த வரிசை முறையினையே பின்பற்றுவோமாக! தொகுத்தவரும் காலமும்: எட்டுத் தொகை நூல்களையும் பற்றிப் பின்னர்த் தனித் தனித் தலைப்பின்கீழ் விளக்கமாக ஆராயப்போகின்றோமாயி னும், இவை பற்றி இங்கே பொதுவாகச் சில கருத்துக்களை ஆராயவேண்டியுள்ளது. இந்த எட்டு நூல்களையும் தொகுத் தவர் யார்? தொகுத்த காலம் எது?-என முதலில் ஆராய வேண்டும். தொகுத்தவர்கள் கடைச்சங்க காலப் புலவர்களும் அரசர்களும் ஆவர்; எனவே, தொகுத்த காலம் கடைச்சங்க காலம் என்பது தானே விளங்கும். இதற்குரிய சான்று வரு மாறு: பத்துப் பாட்டைத் தொகுத்தவர்கள் கடைச்சங்கத்தார்கள் என்பதை, மலைபடுகடாம் - நச்சினார்க்கினியர் உரையி லுள்ள, 'இவர் செய்த செய்யுளை (மலைபடு கடாத்தை) நல்லி சைப் புலவர் செய்த ஏனைச் செய்யுள்களுடன் சங்கத்தார் கோவாமல் (தொகுக்காமல்) நீக்குவர்; அங்ங்னம் நீக்காது கோத்தற்குக் காரணம், ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையான் என்றுணர்க”-என்னும் பகுதியால் அறியலாம் என்னும் செய்தி முன்னரே கூறப்பட்டுள்ளது. பதினெண் மேற்கணக்கைச் சேர்ந்த பத்துப் பாட்டைத் தொகுத்தவர்கள் கடைச்சங்கத்தார்கள் எனில், அதே மேற் கணக்கைச் சேர்ந்த எட்டுத்தொகை நூல்களையும் தொகுத்த வர்களும் அவர்களாகத்தானே இருக்க முடியும் இதற்குப்