பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


268 தமிழ் நூல் தொகுப்புக் & ó☾ ளோம். புறநானூறுதொகுத்தவர்கள் நீக்குப்போக்கு தெரிந்த வர்கள். புறநானூற்றிலுள்ள சேரர் தொடர்பான பாடல்களை யெல்லாம் ஒரு சேரத் தொகுத்து முதலில் அமைத்தால், மற்ற இருகுடி மன்னர்க்கும் என்னவோபோல் இருக்கும். இதே போலப் பாண்டியர்களின் பாடல்கள் அனைத்தையுமோ, சோழர்களின் பாடல்கள் அனைத்தையுமோ ஒரு சேரத் தொகுத்து முன்னால் அமைத்தால் மற்றவர்க்கு என்னவோ போல் இருக்கலாம். எனவே, முடியுடை மூவேந்தர்க்குள் வேறு பாட்டிற்கு இடமின்றி மூவர் பாடல்களையும் தலைக்கு ஒன்று வீதம் மாற்றிமாற்றி அமைத்துத் தொகுத்தனர். இந்தப் பொருத்தமான சுழல் முறையிலேகூட, சேரரை முதலிலும், பாண்டியரை இடையிலும், சோழரை இறுதியிலும் அமைத்ததற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்கமுடியுமா? இதற்கு உரிய தக்க காரணமாக ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. மூவருள் யாராவது ஒருவர் முதலிலும், இன்னொரு வர் இடையிலும், மற்றொருவர் இறுதியிலும் இருந்துதானே தீர வேண்டும்! இவ்வாறு புறநானூறு தொகுத்தவர்க்கு முன்னோடி தொல் காப்பியராவார். தொல்காப்பியம் - பொருள் அதிகாரம்-புறத் திணையியல் 5 ஆம் நூற்பாவில், மூவேந்தரின் பூக்களைக் குறிக்கு மிடத்தில் " வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெருந் தானை பர்மலைந்த பூவும்” என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். போந்தை 'பனை) சேரர்க்கும், வேம்பு பாண்டியர்க்கும் ஆர் (ஆத்தி சோழர்க்கும் உரியனவாம். இங்கே, சேரர், பாண்டியர், சோழர் என்னும் முறைவைப்பு உள்ளமை காணலாம். மற்றும், ஓய்மானாட்டு நல்லியக் கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலும் இத்தகைய முறைவைப்பு உள்ளது. இந் நூலில், சேரரின் வஞ்சிநகர் முதலிலுமும், பாண்டியரின் மதுரை