பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/327

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிற்றுப் புத்து 303 இவனுக்கு உண்டு. எனவே, பதிற்றுப் பத்தின் பத்தாம் பத்துத் தலைவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை யாக இருக்கலாம். இவன் தலைம்ைப்புலவராகிய கபிலருக்கு நண்பன் எனக் கூறப்ப்டும் தமிழ்த்துறை தொடர்பான செய்தி யும், பாண்டியன் தலையாலங்கான்த்துச் செருவென்ற நெடுஞ் செழியனோடும், சோழ்ன் இராசசூயம் வேட்ட் பெருநற்கிள்ளி யோடும் போரிட்டவன் எனக் கூறப்படும் போர்த்துன்றத் தொடர்பான செய்தியும்,பதிற்றுப்ப்த்தின் ஒருபத்துக்குத் தலை வனாய் விளங்கக் கூடிய தகுதியுடையவன் இவன் என்பதற்கு மேலும் சான்று பகரும். இவன், பதிற்றுப்பத்தில் இடம் பெற் றுள்ள இரும்பொறை மரபைச் சேர்ந்த மன்னர்கள் மூவருக்கும் அப்பன்-பிள்ளை, அல்லது அண்ணன்தேம்பி என்ற உறவு முறை யுள்ள தாயத்தினனாவான். - - . . ; பத்தாம் பத்தின் தலைவனென உய்த்துணரப்பட்ட யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறைய்ை அந்தப் பத்தில் பாடியவர் கூடலூர் கிழாராக இருக்கலாம். இவன் ஆதரவின்கீழ் இவனது ஆணைப்படிஐங்குறுநூற்றை இப்புலவர்' தொகுத்திருப்பதைக் கொண்டும், இவனது ஆட்சியின் போது ஒரு விண்மீன் வீழ்ந்ததால், இவன் இன்ன நாளில் இறந்துவிடக் கூடுமே என இப் புலவர் நடுங்கியிருந்ததைக் கொண்டும், அவ்வாறே இவன் இறந்துவிட்டபோது இப் புலவர் மிகவும் வருந்திப் பாடியிருப்பதைக் கொண்டும்,பத்தாம் பத்தை இவரே பாடியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.ஈண்டு மேலும் ஒன்று. நோக்கத் தக்கது. பதிற்றுப் பத்துப் பாடிய புல்வர் ஒவ்வொரு வர்க்கும் தொடர்புடைய மன்னர் ஒவ்வொருவரும் வரையறை யின்றி மிகுந்த பரிசில் அளித்திருப்பதாகச் சொல்லப்பட்டுள் ளது. இவ்வாறே, யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையும் வரையறையின்றி வழங்கும் வள்ளல் எனவும், தாம் அவனிடத்துப் பரிசு பெறும் இரவலர் எனவும், கூடலூர் கிழார் புறநானூற்றுப் பாடலில் (229) கூறியுள்ளார், பாடல் பகுதி வருமாறு: “...ஒருமீன் விழுங்தன்றால் விசும்பி னானே அதுகண்டு,