பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 தமிழ் நூல் தொகுப்புக் கலை என, முல்லைக் கலியை முல்லைப் பாட்டு எனக் குறிப் பிட்டுள்ளார். பத்துப்பாட்டிலும், முல்லைப்பாட்டு என்னும் பெயருடைய நூல் ஒன்றிருப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. இந்தத் துறையில் பேராசிரியரும் இளைத்தவராகத் தெரியவில்லை; நச்சினார்க்கினியரினும் முனைப்பாகவே காணப்படுகிறார். தொல்காப்பியம் - செய்யுளியலில், கலிப்பா வுக்கு இலக்கணம் கூறுகிற நூற்பாக்களின் உரைப்பகுதிகளில், காராரப் பெய்த (கலித்தொகை - 109) என்னும் முல்லைப் பாட்டு” எனவும், 'வாரி நெரிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த” (கலி.114) என்னும் முல்லைப் பாட்டும்" எனவும், 'சுணங்கணி வனமுலைச் சுடர் கொண்ட (கலி-60) என்னும் குறிஞ்சிப் பாட்டினுள்' எனவும், கவித்தொகைப் பாடல்களை முல்லைப் பாட்டு எனவும் குறிஞ்சிப்பாட்டு எனவும் பேராசிரியர் குறிப் பிட்டுள்ளார். முல்லைப்பாட்டு என்னும் நூலைப் போலவே குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலும் பத்துப் பாட்டில் ஒன்றாகும் என்னும் செய்தியும் இங்கே நினைவுகூரற் பாலது. இவ்வாறு கலித்தொகை உரையாசிரியர்களால் பல பெயர்களில் எடுத் தாளப்பட்டுள்ளது. 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி', 'கல்வி வலார் கண்ட கலி. என்றெல்லாம் சிறப்பிக்கப் பெற்றுள்ள கலித்தொகை கற்பதற்கு மிகவும் சுவையானது; அதன் நயம் மிகவும் இனியது. இந் நாற்பாடல்களை உரையாசிரியர்கள் மிகுதியாக எடுத்தாண் டுள்ளனர். நச்சினார்க்கினியர், ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங் களில் இந்நூலை எடுத்தாண்டிருப்பதிலிருந்து இதன் பெருமை நன்கு விளங்கும். - 24. எழுபது பரிபாடல் தலைச்சங்க நூல்களுள் ஒன்றாக எத்துணையோ பரிபாடல் என ஒரு நூல் இறையனார் அகப்பொருள் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி முன்னரே விளக்கப்பட்டுள்ளது. அதனின்றும் வேறு பிரித்துக் காட்டுவதற்காக, எழுபது