பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 தமிழ் நூல் தொகுப்புக் கலை எழுபது பாடல்களுக்கும் உரையெழுதியிருப்பார். நமக்குக் கிடைத்தவை உரையுடன்கூடிய இருபத்திரண்டு பாடல்களே. பாடல் ஆசிரியர்கள்: கிடைத்துள்ளவற்றுள் முதலும் இறுதியும்.தவிர இடையி லுள்ள இருபது பாடல்களுக்கும் உரிய ஆசிரியர் பெயர்கள் கிடைத்துள்ளன. அவர்கள் பதின்மூவர் ஆவர். பெயர்கள் வருமாறு:- ஆசிரியர் நல்லந்துவனார் (6,8,11,20), இளம் பெரு வழுதியார் (15), கடுவன் இளவெயினனார் (3,4,5), கரும் பிள்ளைப் பூதனார் (10), கீரந்தையார் (2), குன்றம் பூதனார் (9,18), கேசவனார் (14), நப்பண்ணனார் (19), நல்லச் சுதனார் (21), நல்லழிசியார் (16,17), நல்லெழுனியார் (12), நல்வழுதி யார் (12), மையோடக் கோவனார் (7)- ஆகியவர் ஆவர். இப் பதின்மூவருள் ஆசிரியர் நல்லந்துவனார் நான்கு பாடல் களுக்கு உரியவராகி முதன்மை பெற்றுள்ளார். பரிபாடல் ஒலைச் சுவடியில் முதல் பாடல் இல்லை அதனால், அதன் ஆசிரியர் பெயர் தெரியாது போயிற்று. தொல்காப்பியம் செய்யுளியலிலுள்ள கட்டுரை வகையின் என்னும் (119-ஆம் நூற்பாவின்கீழ் இளம்பூரணர் எழுதியுள்ள உரையிடையே காணப்படும், ஆயிரம் விரித்த’ என்னும் செய் யுள் பரிபாடல் நூலின் முதல் செய்யுளாக அமைக்கப்பட்டது. இந்தப் பகுதிக்கு இறுதிப் பகுதிக்கு உரிய உரை ஒலைச்சுவடி யின் முகப்பில் இருந்ததால், இந்தப் பாடல் "தானே முதல் பாட்டாக இருக்கமுடியும்! அடுத்த படியாக,- பரிபாடலின் இருபத்திரண்டாம் பாடலின் இறுதிப்பகுதி கிடைக்காததாய் அதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இசையாசிரியர்கள்: பரிபாடல் ஒருவகை இசைப்பாட்டு என்பது முன்னரே கூறப்பட்டது. ஒவ்வொரு பாட்டுக்கும் இசை வகுக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு பாட்டின் இறுதியில் பாடல் ஆசிரியர் பெயருடன் இசையமைத்த ஆசிரியர் பெயரும், இசைப் பெய ரும் தரப்பட்டுள்ளன. முதல் பாடலுக்கும் இறுதிப் பாடலுக்கும் பாடல் ஆசிரியர் பெயர் தெரியாதது போலவே இசையாசிரியர் பெயரும் தெரியவில்லை. மற்றும், பதின்மூன்றாம் பாட