பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 தமிழ் நூல் தொகுப்புக் கலை விளக்கம் தரப்பட்டது. இனி, இந்தப் பதினெண் கீழ்க் கணக்கில் உள்ள தொகை நூல்களைத் தனித்தனியே காண்பாம், 26. நாலடியார் பெயர்க் காரணம்: நான்கு அடி கொண்ட வெண்பாக்களால் ஆனநூல் ஆதலின் இது நாலடியார் எனப்பட்டது. இதில் நானுறு பாக்கள் உள்ளதால் இதனை 'நாலடி நானூறு' என்றும் வழங்குவர். தமிழரின் மறைநூல் என்ற பொருளில் இது வேளாண் வேதம்’ என்றும் வழங்கப்படுகிறது. பதினெண் கீழ்க் கணக்கு நூல் களுள் பெரும்பாலானவை நாலடிவெண்பாக்களால் ஆனவையா யிருப்பினும், இந்நூல் மட்டும் நாலடியார் என வழங்கப்படுவதி லிருந்து இதன் தொன்மை புலப்படுகிறது. இந் நூலுக்கு முதலில் நாலடியார் என்னும் பெயர் வைத்துவிட்டதால், பின் வந்த நாலடிப் பாடல் நூல்களுக்கு இப் பெயர் வைக்க முடி யாது போயிற்று. நூற் பெருமை: இரண்டடி கொண்ட குறள் வெண்பாக்களாலான திருக் குறளோடு ஒத்த பெருமை யுடையது நாலடியார் என்னும் செய்தியை, 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.' 'பழகுதமிழ்ச் சொல்லருமை காலிரண்டில்." 'நாலடி இரண்டடி கற்றவ னிடத்து வாயடி கையடி அடிக்காதே’. முதலிய வழக்காறுகளால் நன்கு அறியலாம். நூல் அமைப்பு நாலடியாரின் நானூறு பாடல்களும், திருக்குறளைப் போலவே வகை தொகை செய்யப் பெற்றுள்ளன. அஃதா வது,- அறத்துப்பால், பொருட்டால், காமத்துப்பால் என