பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/438

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


416 தமிழ்நூல் தொகுப்புக் கலை "வண்பெற்ற முறையொன்று நூற்றினால் வன்தொண்டர்" (25) என்பது பாடல் பகுதி. வன்தொண்டர் என்பது சுந்தரரின் மற்றொரு பெயர். சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறையாகத்தொகுக்கப்பட் டுள்ளது. சுந்தரர் பதிகங்கள் பண் முறையில் நிரல் செய்யப் பட்டுள்ளன. இவர் சென்று வழிப்பட்ட திருப்பதிகளின் வரிசை முறைப்படி தொகுக்கப்பட்ட பதிப்பும் உண்டு. இந்தத் திருப்பதி வரிசைமுறை, பெரிய புராணத்தில் சேக்கிழாரால் கூறப்பட் டுள்ள வரிசை முறையாகும். - சுந்தரரின் நூறு பதிகங்களுள், பன்னிரண்டு பதிகங்கள் இந்தளம் என்னும் பண்கொண்டவை; நான்கு - தக்கராகம் என்னும் பண்கொண்டவை; பதினான்கு - நட்ட ராகம்; ஏழு கொல்லி, ஒன்பது-கொல்லிக் கெளவாணம்; ஏழு - பழம் பஞ்சுரம்; பதினேழு - தக்கேசி; ஐந்து காந்தாரம்: ஒன்று - பியந்தைக் காந்தாரம்; ஒன்று - காந்தார பஞ்சமம்; நான்கு - நட்ட பாடை, நான்கு-நட்ட ராகம்; நான்கு சீகாமரம், நான்கு - குறிஞ்சி; ஒன்று-கவுசிகம்; ஒன்று-செந்துருத்தி; ஐந்து-பஞ்சமம். ஆக, நூறு பதிகங்கட்கும் உரிய பண்கள் இவை. இது பண் வாரியாகத் தொகுக்கப்பட்ட முறையாகும். சில பதிகங்களில் பதினொரு ப்ாடல்கள் இருக்கும். எனவே சுந்தரர் தேவார நூல், ஆயிரத்து முப்பத்தாறு பாடல்கள் கொண்ட நூறு பதிகங்கள் உடைய தாகும். சுந்தரர் சிவனோடு தோழமை முறையில் (சக மார்க்கம்) பழகியவராகச் சொல்லப்படுகிறார். அதற்கு ஏற்றாற் போன்ற பாடல்கள் சிலவும் உள. - ஞான சம்பந்தர் போலவே, சுந்தரரும், பதிகங்களின் இறுதிப் பாடல்களில், தாம் தமிழ் பாடியது பற்றியும் படிப்பவர் பயன் உறுவது பற்றியும் கூறியுள்ளார். எனவே, இவரையும் தம் முத்திரை பொறித்த முத்திரைக் கவிஞர்' என்று கூறலாம். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டாகும். -