பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/455

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 433 களிலிருந்து சில பகுதிகளும், மேலும் தேர்ந்தெடுத்த 112 பாடல்களும் உரையுடன் உள்ளன. உரையாசிரியர்: சிந்து பூந் துறை மா.வே. நெல்லையப்பப் பிள்ளை. வெளியீடு: அவர், மகன் நெல்லை நெ. நடராசப் பிள்ளை. இவ்வாறு சில தேர்ந்தெடுப்புப் பதிப்புகள் இருப்பதன்றி, திருவாசகம் முழுமைக்கும் பல பதிப்புகள் உள்ளன. ஒன்பதாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை என்பது, சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்பதாவதாகும். இதனாலேயே இது இப் பெயர் பெற்றது. இந்தத் தொகுப்பில், ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பாப் பாக்களும், சேந்தனார் என்பவர் பர்டிய திருப்பல்லாண்டுப் பாடல்களும் அடங்கியுள்ளன. சுருக்கமாகத் திருவிசைப்பா, திருப்பல்லாண்டின் தொகுப்பு எனலாம். முதலில் திருவிசைப்பா பற்றிப் பார்க்கலாம். திருவிசைப்பா பாடியவர்களின் பெயர்களோடு திருவிசைப்பா என்பது இணைத்துக் கூறப்பட்டுள்ளது. வருமாறு:- 1.திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா, 2. சேந்தனார் திருவிசைப்பா 3. கரு ஆர்த் தேவர் திருவிசைப்பா,4. பூந்துருத்தி நிம்பி காடவ நம்பி திருவிசைப்பா, 5. கண்டராதித்தர் திருவிசைப்பா, 6. வேணாட்டிடிகள் திருவிசைப்பா, 7. திருவாலி யமுதனார் திரு விசைப்பா,8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா, 9. சேதிராயர் திருவிசைப்பா - என்பனவாகும். திருவிசைப்பா என்பது, திருவிசைப் பாமாலை என்றும் வழங்கப்படும். திருமுறை கண்ட புராணத்தில் மோகமெறி திருவிசைப்பா மாலை முறை யொன்று' (26) என்று கூறப்பட் டிருப்பதை அறியலாம். \ திருவிசைப்பா என்பதை, திரு+இசை-பா என்று பிரித் துப் பொருள் காண வேண்டும். இசை என்பதற்குப் புகழ் - பண் என்னும் பொருள்கள் உண்டு. எனவே, திருவிசைப்பா