பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/465

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 443 என்று குறிப்பிடுவது போல், உன்பால் என்பதற்குப் பதிலாகத் 'தன்பால்’ என்று கூறியுள்ள வழக்கு சுவைபயக்கிறது. நாயனார்ப் புலவர்கள் இந்நூலுள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர்-தேவ நாயனாராக ஆக்கப்பட்டுள்ளனர். நம்பியாண்டார் நம்பி நாயன்மார்களைப் பற்றித் திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூல் பாடியவராதலின், இவர்களையும் நாயனார் களாக ஆக்கிவிட்டார் போலும். இங்கே கூறப்பட்டுள்ள துல்களைப் பாடிய கபிலரும் பரணரும் சங்க காலக் கபிலராகவும் சங்க காலப் பரணராக வும் இருக்க முடியாது. சங்க காலத்தில் இத்தகைய நூல்கள் இல்லை. இத்தகைய சிவபெருமானும் இல்லை. நக்கீர தேவ நாயனார் பாடியனவாகப் பத்து நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் சங்க காலத்தவர். மற்ற நூல்களைப் பாடியவர், பிற்கால் நக்கீரதேவநாயனாராக - அதாவது- வேறொரு வராக இருத்தல் வேண்டும். (இந்த நூலின் முதல் பாகத்தில் பல நக்கீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி, நாலடியார் என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ளமை காண்க). 'திருக் கண்ணப்ப தேவர் திருமறம்' என்ற பெயரில் நக்கீர தேவ நாயனார் ஒரு நூலும் கல்லாட தேவ நாயனார் ஒரு நூலும் தனித் தனியே பாடியுள்ளனர். அது போலவே, 'சிவ பெருமான் திருவந்தாதி என்னும் பெயரில், கபிலதேவ நாயனார் ஒரு நாலும் பரண தேவ நாயனார் ஒரு நூலும் தனித்தனியே பாடியுள்ளனர். பெயர் மாற்றம் என்னிடத்தில் பதினோராந் திருமுறையின் மூன்று விதமான பதிப்புகள் உள்ளன. சில நூல்களின் பெயர்களும் சில ஆசிரியர் பெயர்களும் பதிப்புக்குப் பதிப்பு மாற்றமா யுள்ளன. என்னிடமுள்ள பதிப்புகளுள் இரண்டு பதிப்புகள்