பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 445 ஆக இந்த இரண்டு பதிப்புகளையும் பரிசோதித்தவர் ஒருவரே; அச்சில் பதிப்பித்தவரும் ஒருவரே. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாதெனில், முதல் பதிப்பில் ஒன்பது நூல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன; மற்ற முப்பத்தொரு நூல் களும் அச்சில் உள்ளனவாகத் தெரிவிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு வந்த இரண்டாம் பதிப்பிலோ, நாற்பது நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. என்னிடமுள்ள இப்பதிப்புகளின் தாள்கள் மக்கிப் போய் மஞ்சள்பழுப்பு நிறம் பெற்றுள்ளன. என்னிடமுள்ள மூன்றாம் பதிப்பு, சென்னை - சைவ சித்தாந்த மகா சமாசத்தினரால், 1933(பூரீமுக வருடம்-வைகாசி மாதம்) ஆம் ஆண்டு, சென்னை இராயப்பேட்டை-சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பெற்றது. இந்தப் பதிப்பில் உள்ள வாறே, மேலே, ஆசிரியர் பெயர்களும் நூல்பெயர்களும் தரப் பெற்றுள்ளன. இதை ஒரளவு புதிய பதிப்பு எனலாம்; அவ் விரண்டையும் ஒரளவு பழைய பதிப்பு எனலாம். புதிய பதிப்புக்கும் பழைய பதிப்புக்கும் இடையே யுள்ள ஆசிரியர் பெயர் மாற்றம் முதலில் வருமாறு: புதிய பதிப்பு பழைய பதிப்பு நக்கீர தேவ நாயனார் நக்கீர தேவர் கல்லாட தேவ நாயனார் கல்லாடனார் கபில தேவ நாயனார் கபில தேவர் பரண தேவ நாயனார் பரண தேவர் இந்த நால்வரின் நாயனார் பட்டம் பழைய பதிப்பில் இல்லை. கபிலதேவர் என்பதை வட இந்தியர் கபில்தேவ்' என்கின்றனர். அடுத்து நூல்பெயர் மாற்றம் வருமாறு: புதிய பதிப்பு பழைய பதிப்பு கோயில் திருப்பண்ணியர் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திரு விருத்தம் திருக் கயிலாய ஞான உலா திரு ஆதியுலா