பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 - தமிழ்நூல் தொகுப்புக் கலை 17. திருவிருத்தம், 18. திருவாசிரியம், 19. பெரிய திருவந்தாதி, 20. திருவெழு கூற்றிருக்கை, 21 சிறிய திருமடல், 22. பெரிய திருமடல், 23. திருவாய்மொழி. - என்பது இந்தத் தொகுப்பு முறை. இந்த இருபத்து மூன்று நூல்களோடு, இராமாநுச நூற்றந்தாதியையும் சேர்த்து இருபத்து நான்கு நூல்களாகக் கொள்வது ஒருமுறை. ஆனால், தேசிகப் பிரபந்தத்தில், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளாங்குக் கால முறைப்படி ஆழ் வார்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளனர். 'வையகமெண் பொய்கை, பூதம், பேயாழ்வார். மழிசையர் கோன், மகிழ்மாறன், மதுர கவிகள், பொய்யில் புகழ்க் கோழியர் கோன், விட்டுசித்தன், பூங்கோதை, தொண்டரடிப் பொடி, பாணாழ்வார், ஐயனருட் கலியன் எதிராசர் தம்மோடு ஆறிருவர் ஒரொருவர் அவர்தாம் செய்த துய்யதமிழ் இருபத்து நான்கிற் பாட்டின் தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே' (383) என்பது பாடல். மாறன்=நம்மாழ்வார். கோழியர்கோன் =குலசேகர ஆழ்வார். விட்டு (விஷ்ணு) சித்தன்=பெரியாழ் வார். பூங்கோதை=ஆண்டாள். கலியன்=திருமங்கை யாழ் வார். எதிராசர்=இராமாநுசர். இந்தப் பாடலில், ஆழ்வார்கள் பன்னிருவரும் கால முறைப் படி தரப்பட்டுள்ளனர். அவர்கள் ஆறிருவர்' எனப்பட்டுள்ள னர். அடுத்து எதிராசர் என்பவர் ஒரொருவர் எனப்பட் டுள்ளார். நூல்கள் இருபத்து நான்கு என எண்ணிக்கை யிடப்பட்டுள்ளன. 'தொகை நாலாயிரம்' என மொத்த எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் பன்னிருவர் எழுதிய நூல்கள் இருபத்து மூன்று; எதிராசர் என்னும் இராமாநுசர்மேல் திருவரங்கத் தமுதனார் பாடிய இராமாதுச நூற்றந்தாதி என்னும் நூல் ஒன்று-ஆக இருபத்து நான்கு. -