பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 தமிழ் நூல் தொகுப்புக் கலை மதுரைத் தமிழ்ச் சங்கப் புறத்திரட்டுப் படியொன்றில், குருகை மான்மியச் செய்யுள் இரண்டு உள. இந்நூலின் காலம் கொல்லம் 723 (கி.பி.1548) என இந்நூலின் பதிகச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்விரு பாடல்களும் சேர்க்கப்பட்டிருக் 5 ճ) Ո ԼԸ . புறத்திரட்டு நூல்களுள் காலத்தால் பிற்பட்டது, இராமா வதாரம் என்னும் கம்பராமாயணமாகும். கம்பர் பன்னி ரண்டாம் நூற்றாண்டினர். எனவே, புறத்திரட்டு முதலில் தொகுக்கப்பட்ட காலம், 13-ஆம் நூற்றாண்டிற்கும் 16 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய் இருக்கலாம் எனப் பதிப்பாசிரியர் கருதுவது பொருத்தமே. புறத் திரட்டு-அறத்துப்பால்-முதல் பகுதி புறத்திரட்டின் முதல் பகுதியாகிய அறத்துப்பால் மட்டும் உள்ள பதிப்பாகும் இது. பதிப்பு ஆய்வு: இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர். வெளியீடு: திருவாரூர்த் தமிழ்ப் பிரசுரம். அச்சு: விக்டோரியா அச்சகம், திருவாரூர். பதிப்பாண்டு 1918. முதல் தலைப்பாகிய கடவுள் வாழ்த்து முதல், இருபத் திரண்டாம் தலைப்பாகிய தீவினையச்சம் முடிய இந்தப் பதிப்பு அமைந்துள்ளது. மொத்தப் பாடல்கள் 194. கடைசித் தாள்கள் காணவில்லை. 32 பக்கங்களே உள்ளன. முன்னுரை ஏதும் தெரியவில்லை. ஏட்டுப் பிரதிகளிலிருந்து முதல் முதல் அச்சிட்ட பதிப்பாகும் இது. புறத்திரட்டுச் சுருக்கம் (No. 2031) தமிழக ೨Tರ್ಥಿಕಖq. நூல்திலையத்தில் No. 203.1 என்னும் எண்ணிட்ட படி இது. அச்சிட்ட நூலின் சுருக்கம் போல் காண் கிறது, தொகுத்தவர் பெயர் இல்லை. 753 செய்யுட்கள் உள்ளன' புறத் திரட்டின் பயன் பல நூல்களிலிருந்து எடுத்த பாடல்களின் தொகுப்பு புறத்திரட்டாகும். யாரோ ஒர் அறிஞர், மக்கள் முழு நூல் களையும் படிக்க முடியாது என்று கருதி, அருள் உள்ளத்தோடு,