பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 - தமிழ் நூல் தொகுப்புக் ଣାଈ୩ର) பேரகத்தியத் திரட்டு உரை-வெளியீடு: ச.பவாநந்தம்பிள்ளை, சென்னை எஸ்.பி. ஸி.கே.அச்சுக்கூடம்-1912 ஆம் ஆண்டு. நூல்கள்: 1. பேரகத்தியச் சூத்திரம், 2. பேரிசைச் சூத்திரம்-என்பன. -- பவாநந்தம் பிள்ளையின் முகவுரைக் குறிப்பு வருமாறு: அகத்தியச் சூத்திரங்கள் சிலவற்றை, 60 ஆண்டுக்கு முன் களத்தூர் வேதகிரி முதலியார் வெளியிட்டார். பல நூல்களின் உரைகளில் பல சூத்திரங்கள் காணப்படுகின்றன. வேதகிரியார் தம்மிடம் மூவாயிரம் பாக்கள் கிடைத்ததாகக் கூறி 165 பாக்கள் மட்டுமே வெளியிட்டார். எனக்கு மேலும் 16 பாக்கள் கிடைத்துள்ளன. 1. அகத்தியர் சூத்திரம் பன்னிரண்டாயிரம். இது பேரகத் தியம், சிற்றகத்தியம் என்னும் இரு பிரிவுகள் உடையது. அகத்தியரின் மாணாக்கர்கள் பன்னிருவர்.அவர்கள்:- தொல் காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார், அவிநயனார், காக்கைபாடினியார், நற்றத்தனார், துராலிங்கர், 'வையாபிகர்: வாய்ப்பியர், கழாரம்பர், செம்பூட் சேய், வாமனர்-ஆகி யோர். (இந்த விவரமும் தரப்பெற்றுள்ளது) 2. பேரிசைச் சூத்திரம்-14. 'தமிழ் மொழி விளக்கம்’ என்னும் தலைப்பில் உள்ளது. இது தமிழ்பற்றிக் கூறுவது. யான் (சு.ச.) கண்ட நூலில் உள்ளதை மேலே எழுதி யுள்ளேன். ஆராய்ச்சியாளர்கள் தம் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். அகத்தியர் வைத்திய சில்லறைக் கோவை அகத்திய முனிவர் அருளியது. ஆ.இரத்தினவேலு முதலி யார் தூர தேசங்களிலிருந்து ஏட்டுப் பிரதிகள் வரவழைத்து அவரது அச்சுக்கூடத்தில் வெளியிட்டதாக எழுதப்பட்டுள் ளது. சென்னை.1888,724 பக்கங்கள் கொண்ட திரட்டு. உ-ஞானம், வியாசம், வசாரம், நாடி, வைத்தியம், பஞ்சாட் சர சாக்கிரங்கள் முதலியன. பல நோய்கட்கு உரிய-பல மருந்து வகை பற்றிய சிறுசிறு பகுதித் தொகுப்பு. நான் பார்த்த பிரதி பழந்தாளாய் உள்ளது.