பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/501

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. பிற்காலம் திருப்புகழ் திருவண்ணாமலையில் பதினைந்தாம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்த அருணகிரிநாதர் என்பவர், முருகன் திருப் புகழைப் புகழ்ந்து பல்வேறு ஊர்களில் பல காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பே 'திருப்புகழ்' என்னும் இந் நூலாகும். - ஆசிரியர் பதினாறாயிரம் பாடல்கள் பாடியதாகச் சொல் - லப்படுகிறது. தோற்றம் இருநூற்றைம்பது ஊர்களின் மேல் திருப்புகழ் பாடியுள்ளார் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இப்போது கிடைத்திருப்பவை 1324 பாடல்களேயாம். வடக்குப்பட்டு சுப்பிரமணியப் பிள்ளையும் அவர் மைந்தர் செங்கல்வராயப் பிள்ளையும் சேர்ந்து 1313 பாடல்களை மூன்று தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டனர். பின்னர், திருநெல்வேலி வீ.சங்கரன் பிள்ளை 1967 ஆம் ஆண்டு நூல் முழுமையும் அடக்க விலைப் பதிப்பாக வெளியிட்டார். மேலும் பலர் பதிப்பித்தனர். சென்னை-திருப்புகழ் அமிர்தம்’ இதழ் செயலகத்தாராலும் மதுரை ஜெ.மு. குருநமசிவாயன் என்பவ ராலும் (1974) பிறராலும் 1324 பாடல்கள் தொகுத்து வெளி யிடப்பெற்றன. அருணகிரிநாதரின் மற்றைய நூல்களும் குரு நமசிவாயன் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பெயர்க் காரணம்: முருகனது தெய்வப் புகழ் பாடப்பட்டிருத்தலால் திருப் புகழ் என்னும் பெயர் தரப்பட்டது. அருணகிரிநாதரே ஒரு பாடலில் நூல்பெயரைக் குறிப்பிட்டுள்ளார். 'திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக் கருள்கை மறவேள்” என்பது பாடல் பகுதி. இறைவன் பெருமையைத் திருப்புகழ்' என்னும் பெயரால் தமது தேவாரப் பாடல் ஒன்றில் சுந்தரரும் குறிப்பிட்டுள்ளார். -