பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 தமிழ் நூல் தொகுப்புக் கலை அருணகிரிநாதர் திருமுறைத் திரட்டு இந்தத் தொகுப்பில், 400 திருப்புகழ்ப் பாக்களும், திரு வகுப்பு - கந்தர் அந்தாதி-கந்தர் அலங்காரம்-கந்தர் அனுபூதி ஆகியவையும் உள்ளன. காஞ்சி. நாகலிங்கமுனிவர் பதித்ததுபூரீமுக, ஆவணி, 1933-கேசரி அச்சுக் கூடம், சென்னை. திருப்புகழ்த் திரட்டு (1955) இத் தொகுப்பில், 225 திருப்புகழ்ப் பாடல்கள் குறிப்புரை புடன் உள்ளன. வெளியீடு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், அப்பர் அச்சகம்-சென்னை -1955. திருப்புகழ் மஞ்சரி சில ஊர்த் திருப்புகழ்கள், ஆறு படைவீட்டுத்திருப்புகழ்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை வெண்பாக்களுடன், வேறு சில முருகன் வழிபாட்டுப் பாடல் கள் இத்தொகுப்பில் உள்ளன. பதிப்பு: தி விட்டில் பிளவர் கம்பெனி-சென்னை - 17-1966. பாராயணத் திருப்புகழ் 120 திருப்புகழ்கள் - உரையுடன் - முதல் பாகம் - உரை. இராய வேலூர் கா.மு. சின்னப்பா பிள்ளை - பதிப்பு: பி.நா. சிதம்பரநாத முதலியார் பிரதஸ், சென்னை - 1937 - பெரல் பிரஸ், சென்னை. திருப்புகழ்த் திரட்டு (1966) தேர்ந்தெடுத்த 197 திருப்புகழ்ப் பாடல்களும் அருணகிரி நாதரின் மற்ற நூல்களிலிருந்து சிற்சில பாடல்களும் இத் தொகுப்பில் உள்ளன. முருகன் திருவருட் சங்க வெளியீடு - சென்னை - 5 - 1966 - லட்சுமி விஜயம் பிரஸ் - சென்னை - 5. இவ்வாறு திருப்புகழ் தொடர்பான பல வெளியீடுகள் இன்னும் உள்ளன. இறை வணக்கப் (தோத்திரப்)பாடல்கள் திரட்டு இறை வணக்கப் பாடல்களின் திரட்டுகள் பல, தோத்திர மஞ்சரி, தோத் திரக் கொத்து, தோத்திரத் திரட்டு-மாலை