பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/518

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


496 தமிழ்நூல் தொகுப்புக் கலை தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு (மூலமும் நூதன உரையும்) நூலின் முதல் பக்கம் சிதைந்து போனதால், தொகுப் பாசிரியர் முதலிய எந்த விவரமும் தெரியவில்லை. நூல், பெரிய பக்க அளவில் 600 பக்கங்கள் கொண்டது. நூதன உரை எழுதியவர் யாரோ? - தாயுமானவர் அமைச்சர் பதவியையும் இல்லறத்தையும் விட்டுத் துறவு பூண்டதால், பல மெய்யுணர்வுப் பாடல்கள் மக்கட்குக் கிடைத்துள்ளன. - நீதி நூல் திரட்டுகள் அற நெறி - நீதி கூறும் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேற்கை, உலக நீதி, நன்னெறி, நீதி வெண்பா, நீதி நெறி விளக்கம் முதலிய நீதி நூல்களைப் பலர் தொகுத்து வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பல நீதி நூல்களையும் படித்துப் பயன் பெற வாய்ப்பளிக்கும் இம் முயற்சி பாராட்டத்தக்கது.சில தொகுப்புகளைக் காண்பாம். பால நீதிச் செய்யுள் திரட்டு வெளியீடு - மாக் மில்லன் கம்பெனி, சென்னை. உள்ளுறை: உலக நீதி, ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நீதி வெண்பா, நன்னெறி, முதுமொழிக் காஞ்சி, நீதி நெறி விளக்கம், திரிகடுகம், நான்மணிக்கடிகைஆகிய நூல்களின் தொகுப்பு. - நீதி நூல் திரட்டு நூல்கள்: வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, நன்னெறி, திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயர் உரையுடன். மூன் றாம் பதிப்பு: மன்மத-பங்குனி, பழைய தாள் - பழம் படி. நீதி நூல் கொத்து தொகுப்பு-உரை: திருவாரூர் டி.பி. நாராயணசாமி பிள்ளை. வெளியீடு: மனோன்மணி விலாசப் புத்தக சாலை, கோலாலம்பூர், மலேயா. அச்சு -பாரதி பிரஸ், சூளை, சென்னை. ஆண்டு இல்லை. உள்ளுறை: ஆத்தி குடி, கொன்றை வேந்தன், வாக்குண் டாம், உலக நீதி, நல்வழி, நன்னெறி - ஆகியவை உரையுடன் உள்ளன. -