பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் - 505 2. திருக்கருவை வெண்பா அந்தாதி 3. திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி. சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய 4. பழமலை அந்தாதி 5. செந்தில் நிரோட்டக யமக அந்தாதி சிவஞான சுவாமிகள் இயற்றிய 6. இளசைப் பதிற்றுப் பத்து அந்தாதி 7. குளத்தார்ப் பதிற்றுப் பத்து அந்தாதி 8. கலைசைப் பதிற்றுப் பத்து அந்தாதி கம்பர் இயற்றிய-9. சரசுவதி அந்தாதி - குகை நமசிவாயர் இயற்றிய - 10. அருணகிரி அந்தாதி - பரஞ்சோதி முனிவ ரியற்றிய-11. மதுரைப் பதிற்றுப் பத்து அந்தாதி - அபிராமி பட்டரியற்றிய 12. அபிராமி அந்தாதி - என்பனவாம். அந்தாதிக் கொத்து - . அரசு.ஓலைச் சுவடி நூல் நிலையம் –51. முதல் பாகம் முகவுரை - தி. சந்திரசேகரன், 15-2-1956. 12 அந்தாதிகளின் திரட்டு. அவை வருமாறு:1. கணபதி அந்தாதி. 2. திருவரங்கப் பதிற்றுப்பத் தந்தாதி - வேங்கடாசல தாசன். 3. சேடமலைப் பதிற்றுப்பத் தந்தாதி. 4. திருவரவினன் குடி பதிற்றுப்பத் தந்தாதி - சுப்பிரமணிய முனிவர். 5. திருமங்கைக் கரும்பேசர் பதிற்றுப்பத் தந்தாதி 6. திருவெவ்வுளுர் அந்தாதி-நாராயண தாசர் மதுரை யமக அந்தாதி - பல பட்டடைச் சொக்கநாதக் கவிராயர் 8. சடக்கர அந்தாதி 9. சுப்பிரமணியர் அந்தாதி 10, செளந்தரி அந்தாதி